Thangalaan Box Office Collection: உலகம் முழுவதும் ஜொலித்த தங்கலான்.. முதல் நாள் வசூல் விபரம் இதோ!

சென்னை: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தினை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரெடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக தங்கலான் படத்தின் வசூல் விபரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தங்கலான் திரைப்படம், கி.பி. 1850 காலகட்டங்களில் கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினர் என்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல், அதிலிருந்து எவ்வாறு மீண்டு தங்கத்தை எடுக்கின்றனர் என்பதுதான் கதை. இந்தப் படத்தினை பல வரலாற்று பின்னணியில் இருந்து உருவாக்கியுள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர்.

Thangalaan Vikaram Pa Ranjith

குறிப்பாக படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பும் வசன உச்சரிப்பும் நம்மை கதை நடக்கும் காலத்திற்கே கொண்டு செல்கின்றன. படத்தின் மற்றொரு பலம் என்றால் அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்தான். இந்தப் படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை படத்தினை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்.

பௌத்தம்: படத்தில் வரும் அசோகன் கதாபாத்திரம், புத்தர் சிலையில் தலைப் பகுதியை தேடி எடுப்பதும் அதனை வெட்டி எடுக்கப்பட்ட சிலையில் மீண்டும் இணைப்பது, புத்தர் சிலைக்கு அருகிலேயே எப்போதும் இருப்பது, தங்கம் எடுக்க வந்தவர்களுக்கு எதிராக பேசிக்கொண்டே இருப்பது என இருந்த காட்சிகள் அனைத்தும் வரலாற்றினை அழுத்தம் திருத்தமாக சொல்லும் காட்சிகளாக உள்ளது. இந்தியா முழுவதும் பௌத்தத்தை பரப்பியதில் மாமன்னன் அசோகனின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஜனரஞ்சகமான சினிமா: ஜனரஞ்சகமான சினிமாவிற்கு இருக்கும் ஒரு சில அம்சங்களான இடைவெளி முடிந்ததும் ஒரு பாடல், படத்தின் தொடக்கத்தில் ஒரு பாடல், க்ளைமேக்ஸில் படத்தின் தீம் கலந்த பாடல் என இந்தப் படத்திலும் பொருந்திப் போயுள்ளது. சாதாரண உரையாடலில் கலந்து வரும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது எனலாம்.

Thangalaan Vikaram Pa Ranjith

வரலாற்று மீட்டுருவாக்கம்: நிகழ்கலத்து விக்ரமை அவரது பூட்டன் காலத்துடன் இணைக்க பயன்படுத்திய மாய எதார்த்த வரலாற்றுத் தொடர்புக் காட்சிகள் இந்தியாவின் வரலாற்றினை கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ளாத ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். மற்றபடி இந்தபடம் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து திரைப்படமாக கொடுத்துள்ளது தங்கலான் படக்குழு.

வசூல் விபரம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதில் தமிழ்நாட்டில் ரூபாய் 11 கோடிகளுக்கு மேலும், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் இரண்டு கோடிகளும் என முதல் நாளில் மட்டும் ரூபாய் 13 கோடிகளை தங்கலான் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் இன்னும் ஹிந்தியில் ரிலீஸ் செய்யப்படவில்லை. ஹிந்தியிலும் ரிலீஸ் ஆகியிருந்தால் படத்தின் முதல் நாள் வசூல் 15 கோடிகளுக்கு மேல் இருந்திருக்கும்.

More from Filmibeat

Read more about: thangalaan vikaram pa ranjith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X