Veera Dheera Sooran BO: விக்ரம் படத்திற்கு வந்த பிரச்னை.. 3 நாளில் வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?
சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் வெளியாகி 3 நாள்களை கடந்து விட்ட நிலையில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் தடுமாற்றத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது. இதுவரை எண்ணிக்கை அளவிலேயே படத்தின் வசூல் நிலவரம் இருக்கிறது என்பதை இதில் காணலாம்.
பண்ணையாரும் பத்மினியும், சித்தா படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தின் 2ம் பாகம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை பொறுத்தவரை ஒரே இரவில் நடக்கும் கதை என பட புரோமோஷன் நிகழ்ச்சிகளிலேயே இயக்குநர் தெரிவித்துவிட்டார். ரசிகர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் இதுதான் என பட்டென உண்மையை போட்டு உடைத்தார்.

ரிலீஸ் ஆவதில் தாமதம்: கடந்த 27ஆம் தேதி காலை முத்ல ஷோவிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. பண சிக்கலால் வீர தீர சூரன் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. டெல்லி நீதிமன்றமும் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து அன்று பிற்பகல் 3 மணிக்கு படத்திற்கான எல்லா பிரச்னையும் முடிந்து இன்று மாலை 6 மணிக்கு படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது. இந்த அறிவிப்பால் விக்ரம் ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். பின்னர், முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் விக்ரமை புகழ்ந்து பேசினர். ஒரு சிலர் ஆதங்கத்தில் 10 வருடமாக விக்ரமை வேஸ்ட் செய்துவிட்டனர் என கோபத்துடன் பேசி சென்றனர்.
நன்றி தெரிவித்த துஷாரா: வீர தீர சூரன் படத்தில கலைவாணியாக நடித்த துஷாரா விஜயனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் கொடுத்திருக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. கலைவாணி கதாப்பாத்திரம் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். இந்த கதாப்பாத்திரம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அருணகுமார் சாருக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். விக்ரமுடன் திரையில்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி என துஷாரா விஜயன் தெரிவித்திருந்தார்.

பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சன்: படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் 2 நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது வீர தீர சூரன். பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால் படத்திற்கான முன்பதிவு வேகம் எடுத்துள்ளது. 3 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனை பொறுத்தவரையில் எம்புரானை மிஞ்சவில்லை என்றாலும், வீர தீர சூரன் 13 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளதாகக் கூெறப்படுகிறது. வெளிநாடுகளில் இதுவரை 4 கோடிக்கு மேல் வசூலை தொட்டுள்ளது. நேற்றையை நிலவரப்படி 2 நாளில் ரூ.2.5 கோடி என தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படத்தை 29.53% பேர் முன்பதிவு செய்துள்ளனர். தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 15.18% பேர் முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான முதல் நாளில் ரூ.3.52 கோடி வசூல் செய்திருந்தது. இதில், தமிழில் ரூ.3.25 கோடியும், மீதம் 29 லட்சம் தெலுங்கில் இருந்து வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. எம்புரான் படத்துடன் வீர தீர சூரன் மோதுவதால் படத்தின் வசூலையும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











