என் உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றார், தள்ளிவிட்டேன்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

By Siva

மும்பை: இயக்குனர் விகாஸ் பெஹல் வலுக்கட்டாயமாக தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றதாக பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் மீது நடிகை கங்கனா ரனாவத் பாலியல் புகார் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகையும் விகாஸ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த நடிகை பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

பார்ட்டி

பார்ட்டி

விகாஸ் பெஹல் ஒரு மாதிரியான ஆள். அதனால் அவருடன் தனியாக எங்கும் செல்வது இல்லை. ஒரு நாள் எனக்கு தெரிந்த பலரும் சென்ற பார்ட்டிக்கு சென்றேன். அங்கு விகாஸ் பெஹலும் இருந்தார். எனக்கு தெரிந்தவர்கள் இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தேன். அப்போது விகாஸ் குடிபோதையில்( போதை போன்று நடிப்பு) என் உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றார்.

நடிப்பு

நடிப்பு

என்னை முத்தமிட முயன்ற விகாஸை என் பலத்தை எல்லாம் பயன்படுத்தி தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நான் கிளம்பிச் சென்றதை பார்க்காதது போன்று அவர் நடித்தார். அந்த பார்ட்டியில் 20 பேர் இருந்திருப்பார்கள். பார்ட்டியில் இருந்து கிளம்பி நேராக என் காதலரின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் விகாஸோ எனக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

தொல்லை

தொல்லை

நீ ஏன் கிளம்பிச் சென்றாய், நான் உன்னை டிராப் செய்திருப்பேனே. நான் குடிக்கவில்லை, தம்மடிக்கவில்லை. வேறு எதுவும் பயன்படுத்தவில்லை. நான் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு எழுத்தாளர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன் என்று விகாஸ் எனக்கு மெசேஜ் அனுப்பினார். குடிபோதையில் இருப்பது போன்று நடித்து பெண்களிடம் தவறாக நடப்பது விகாஸின் யுக்தி.

முன்னாள் மனைவி

முன்னாள் மனைவி

செய்வதை எல்லாம் செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போன்று நடிப்பார் விகாஸ். அந்த பார்ட்டிக்கு பிறகு நான் விகாஸுடன் சேர்ந்து பணியாற்றுவதை தவிர்த்தேன். அவரின் மோசமான லீலைகள் குறித்து அவரின் முன்னாள் மனைவிக்கு தெரியும். அவரின் வாழ்க்கையை விகாஸ் நாசமாக்கிவிட்டார். பெண்களிடம் தவறாக நடந்ததால் அவரை சில இடங்களில் வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.

பிரபலம்

பிரபலம்

பெண்களிடம் தொடர்ந்து தவறாக நடந்து கொள்ளும் நபருடன் சேர்ந்து ஏன் கம்பெனி துவங்க வேண்டும் என்பதே என் கேள்வி. நான் ஒரு பிரபலமான நடிகை. என் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற ஆள் மீது போலீசில் புகார் அளிக்க பயப்படக் கூடாது. அப்படி இருந்தும் பெயர் சொல்ல பயப்படுகிறேன் என்கிறார் அந்த நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X