twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்

    By Siva
    |

    Recommended Video

    தமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் சிக்கினார்- வீடியோ

    மும்பை: இயக்குனர் விகாஸ் பெஹல் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார் நடிகை லேகா வாஷிங்டன்.

    சென்னை பெண்ணான லேகா வாஷிங்டன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் மீது கங்கனா ரனாவத் புகார் தெரிவித்துள்ள நிலையில் லேகாவும் புகார் கூறியுள்ளார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு விகாஸ் மோசமாக நடந்து கொண்டதாக லேகா தெரிவித்துள்ளார்.

    [இந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்?]

    லேகா

    லேகா

    பீட்டர் கயா காம் சே படத்தின் ஆடிஷனுக்கு லேகா வாஷிங்டன் சென்றுள்ளார். அப்போது விகாஸ் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக லேகா புகார் தெரிவித்துள்ளார். யுடிவி மூவீஸ் தயாரிப்பில் ராஜீவ் கந்தல்வால், இஷா தல்வார் நடித்த அந்த படம் ரிலீஸாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட வேலைகள் நடந்தபோது விகாஸ் பெஹல் யுடிவியின் சிஓஓவாக இருந்தார்.

    படம்


    பீட்டர் கயா காம் சே படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக 3 ரவுண்டு ஆடிஷன் நடந்து இயக்குனரும், தயாரிப்பாளர்களும் என்னை தேர்வு செய்த பிறகு விகாஸ் பெஹல் அந்த முடிவை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். நீங்கள் மற்றும் அந்த பெண்ணில் யாரை தேர்வு செய்வது என்பது கடினமாக உள்ளது(இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருந்தார்). பெண்ணியம் சார்ந்த படங்களை அவர் எடுப்பது தான் விந்தை என்கிறார் லேகா.
    #metoo

    மீ டூ

    லேகா வாஷிங்டனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் தமிழ் திரையுலகம் பற்றி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார். ஆமாம், நேரம் வந்துவிட்டது என்று பதில் அளித்துள்ளார் லேகா. அப்படி என்றால் மீ டூவில் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

    மோசம்

    தொல்லைகள் நிறைந்த பாலிவுட்டில் விகாஸ் பெஹல் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. இதனால் நான் அங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்கிறார் லேகா. பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சகஜம் என்று பலர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Lekha Washington tweeted that, 'Vikas Bahl was one of the least offensive in an industry chock-o-block with misogyny, entitlement and harassment.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X