இயக்குனர் விகாஸ் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: சக இயக்குனர் பரபரப்பு தகவல்

By Siva

Recommended Video

விகாஸ் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: இயக்குனர் பரபரப்பு தகவல்- வீடியோ

மும்பை: இயக்குனர் விகாஸ் பெஹல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார் என்று இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வானே தெரிவித்துள்ளார்.

இயக்குர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானே, விகாஸ் பெஹல், தயாரிப்பாளர் மது மான்டேனா ஆகியோர் சேர்ந்து ஃபேன்டம் பிலிம்ஸ் என்ற பட தயாரிப்பு மற்றும் வினியோகிப்பு நிறுவனத்தை துவங்கினார்கள். அந்த நிறுவனம் இந்த மாதம் கலைக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் கடந்த 2015ம் ஆண்டு விகாஸ் பெஹல் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இந்நிலையில் விகாஸ் பற்றி விக்ரமாதித்ய மோத்வானே ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

விகாஸ் மற்றும் அந்த பெண் இடையே கடந்த 2015ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து எனக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தெரிய வந்தது. அனுராக் போன் செய்து சொல்லித் தான் எனக்கு தெரியும். நான், மது, அனுராக் அந்த பெண்ணை அழைத்து பேசியபோது அவர் மொத்த விஷயத்தையும் கூறினார். உடனே நாங்கள் விகாஸ் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கினோம்.

காதலர்

காதலர்

விகாஸை நிறுவனத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முன்வந்தோம். அந்த பெண்ணும் சம்மதித்தார். அந்த சம்பவம் குறித்து நினைவே இல்லை என்ற விகாஸும் எங்கள் நடவடிக்கைக்கு சம்மதித்தார். அந்த பெண் இந்த விஷயத்தை மேலும் தொடர விரும்பவில்லை என்று அனுராக் என்னிடம் கூறினார். அந்த பெண்ணின் பெயர் வெளியே வர வேண்டாம் என்று அவரின் காதலர் நினைக்கிறார்.

மறுப்பு

மறுப்பு

அனுராக் மற்றும் சுப்ரா எவ்வளவோ பேசியும் அவரின் காதலர் மனம் மாறவில்லை. விகாஸை எங்கள் வழியில் பார்த்துக் கொள்கிறோம் என்றார் அவர். அந்த பெண்ணிடம் கூறியது போன்று விகாஸை நிறுவனத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்தோம். அவரை படங்கள் தயாரிக்க விடாமல் செய்தோம். நான் விகாஸை காப்பாற்ற நினைப்பதாக குறை கூறுபவர்களே, நான் மீடியா முன்பு அமைதியாக இருந்ததற்கு காரணம் உள்ளது.

நாசம்

நாசம்

இந்த விஷயத்தை சரியான முறையில் தீர்க்க விரும்பினேன். அந்த பெண்ணின் பெயர் வெளியே வராமல் பாதுகாத்தேன். அந்த பெண்ணுக்கு நடந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். விகாஸ் பெஹல் பாலியல் தொல்லை கொடுப்பவர். அவர் ஒரு இளம்பெண்ணை குறி வைத்து அவரின் நம்பிக்கையை வீணாக்கி அவரின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அந்த வடு எப்பொழுதுமே இருக்கும். என்னால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும். என் கண் பார்வையில் இனி இது போன்று நடக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

More from Filmibeat

Read more about: mumbai மும்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X