Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரியா என்ட்ரி ஆகாத வரை சுஷாந்த் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை.. வழக்கறிஞர் பரபர குற்றச்சாட்டு!
மும்பை: ரியா சக்ரவர்த்தி என்ட்ரி ஆகாத வரை சுஷாந்த் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என அவரது குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்திதான் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுஷாந்தின் குடும்பத்தினரும் இதே குற்றச்சாட்டைதான் முன் வைத்து வருகின்றனர். ரியா சக்ரவர்த்தியை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சைஃப் அலி கானை ராவணனாக ஏற்க முடியாது.. ராணா தான் கச்சிதமாக இருப்பார்.. கிளம்பியது புது சிக்கல்?

பெரும் குற்றம்
இந்நிலையில் ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்கு அவருக்கே போதை மருந்துகளை கொடுத்த ஆதாரங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். ஒருவருக்கு தெரியாமல் அவரை போதைக்கு அடிமையாக்குவது பெரும் குற்றம் என அவரது குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் கூறியிருந்தார்.

பிரச்சனை இல்லை
இதனை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு 2019 வரை எந்த பிரச்சனையும் இல்லை. ரியா சக்ரவர்த்தி தனது வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவர் ரெஸ்ட்லெஸாக இருந்தார்.

குடும்பத்தினர் உணர்ந்தனர்
அதன்பிறகுதான் அவர் பதட்டத்துடன் இருப்பதை அவரது குடும்பத்தினர் உணர்ந்தனர். அதற்கான உதவியையும் அவர்கள் சுஷாந்துக்கு வழங்கினர். ஆனால் அவருக்கு பைபோலர் டிஸ்ஆர்டர் அல்லது மனச்சோர்வு இருந்தது அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றார்.

கொலையாக இருக்க சாத்தியம்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார் என்று அவரின் குடும்பத்தினர் நம்புகிறார்கள் என்று அவர் கடந்த மாதம் 3ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் அவரது மரணத்தில் ஏதோ பெரிதாக உள்ளது என்றும் அவரது மரணம் கொலையாக இருக்க சாத்தியம் உள்ளது என்று அவர்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்டிருக்கலாம்
சுஷாந்த் தற்கொலை செய்ய தள்ளப்பட்டுள்ளதாக முதலில் அவரது குடும்பத்தினர் கருதினர், அதுதான் எஃப்ஐஆரிலும் மென்ஷன் செய்யப்பட்டிருந்தது. தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர் என்றார்.

குடும்பத்தினரிடம் விசாரணை
இதனிடைய தற்போது சிபிஐ சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரித்து வருகிறது. அவர்கள் ரியாவை இதுவரை நான்கு முறை விசாரித்துள்ளனர். சுஷாந்தின் ஊழியர்கள், ரியாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.