Ajithkumar: அஜித்திடம் மாட்டிக் கொண்ட அனிருத்.. மகிழ் திருமேனி? நடந்தது இதுவா? கலாய் வீடியோ!
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இப்படம் ப்ரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக். படத்தினை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரில் அனிருத்தின் பின்னணி இசை அஜித் ரசிகர்களை கவர்ந்தது.
காராணம் அஜித் ரசிகர்கள் ஏற்கனவே, பொது இடங்களில் அஜித்தே.. கடவுளே.. என கத்திக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு ஏதுவாகவே, டீசரில் இடம் பெற்ற பின்னணி இசையும் அமைந்தது. இப்படியான நிலையில் படத்தின் பின்னணி இசை குறிப்பாக படத்தின் தீம் மியூசிக் உருவாக்கத்தின்போது என்ன நடந்திருக்கும் என விக்கல்ஸ் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் காலாய்த்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி படம் வரும் தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் அஜித் ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதற்காக அவர் தொடங்கியுள்ள புதிய அணியின் பயிற்சியிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றார்.
கடவுளே அஜித்தே: இப்படியான நிலையில் முதலில் எந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. இந்த கேள்விக்கு பதிலாக, விடாமுயற்சி டீம், வெளியிட்ட டீசரில் 2025 பொங்கல் எனத் தெரிவித்துவிட்டனர். இதனால், ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க, அஜித் ரசிகர்கள் பொது இடங்களில் எங்கு கூடினாலும், அஜித்தே கடவுளே எனக் கத்திக் கொண்டு இருந்தனர். இது அஜித்திக்கு தெரியவந்ததும், இவற்றை தவிர்க்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். அதில், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட்ட வேண்டும் என விரும்புகிறேன்.
அசௌகரியம்: எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார்.
கலாய்: அஜித்தின் அறிக்கை இப்படி இருக்கும் நிலையில், விடாமுயற்சி டீசரின் பின்னணி இசை அஜித்தே.. கடவுளே என ரசிகர்கள் கத்துவதற்கு ஏதுவாக இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இப்படியான நிலையில், அஜித் கோபத்தினைப் பார்த்த அனிருத்தும் இயக்குநர் மகிழ் திருமேனியும் விடாமுயற்சி படத்தின் பின்னணி இசையை கொஞ்சம் ட்விஸ்ட் செய்து வெளியிட்டுள்ளதாக கலாய்த்து விக்கல்ஸ் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதாவது தொடக்கத்தில் படத்தின் பின்னணி இசையில் கடவுளே.. அஜித்தே.. என இருப்பதுபோலவும், அஜித்தின் கோபத்தை தெரிந்த பின்னர், முயற்சி, வெற்றி என மாற்றிக்கொண்டதாகவும் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











