ஏஜென்ட் டீனாவின் வெறித்தனமான காட்சிகள் வெளியீடு.. 16வது நாளில் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் 16 நாட்கள் ஆகியும் கொஞ்சம் கூட கூட்டம் குறையாமல் தியேட்டர்களை தெறிக்க விட்டு வருகிறது.
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா என மெயின் கேரக்டர்கள் மட்டுமின்றி ஏஜென்ட் உப்பிலியப்பன், ஏஜென்ட் டினா உள்ளிட்ட சின்ன சின்ன ரோல்களின் கதாபாத்திரத்தையும் வெயிட்டாக எழுதியது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
இந்நிலையில், #VikramAllTimeRecord டிரெண்டாகி வரும் நிலையில், ஏஜென்ட் டினாவின் காட்சிகளை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், 16 நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்..

ஆல் டைம் ரெக்கார்ட்
தமிழ் சினிமாவில் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2ம் பாகம் தான் கடந்த 5 ஆண்டுகளாக அதிகம் வசூல் செய்த படமாக தமிழ்நாட்டில் முதலிடத்தை பிடித்து வைத்திருந்தது. ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தும் அந்த ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகள் படமே ரிலீஸ் செய்யாத கமல் வந்து அந்த சாதனையை அசால்ட்டாக செய்து ஆல் டைம் ரெக்கார்டு பிரேக் செய்துள்ளார். #VikramAllTimeRecord தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் தந்தை
நவீன தமிழ் சினிமாவின் தந்தையே கமல் தான் என ரசிகர்கள் அவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைதளத்தில் விக்ரம் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். விக்ரம் படத்தில் அந்த பெரிய சைஸ் மிஷின் கன்னை எடுத்து அவர் சுடும் போட்டோவை ஷேர் செய்து இந்த ரசிகர் இப்படியொரு ட்வீட்டை போட்டுள்ளார்.
ஏஜென்ட் டீனா
விக்ரம் படம் வெளியாகி 16 நாட்கள் ஆன நிலையில், பல சீக்ரெட்களையும் அதிகாரப்பூர்வமாக அவர்களே புரமோக்களாக ரிவீல் செய்து வருகின்றனர். ஏஜென்ட் டீனாவின் அந்த அசத்தலான சண்டைக் காட்சி சீனை தற்போது வெளியிட்டு #VikramAllTimeRecord ஹாஷ்டேக்கிற்கு மேலும், வலிமை சேர்த்துள்ளனர்.
Recommended Video

16 நாள் வசூல்
தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளியான பல இடங்களிலும் 16வது நாளிலும் 80 சதவீதத்திற்கும் மேல் அரங்குகள் நிறைந்து சக்கைப் போடு போட்டு வருவதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 155 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ள விக்ரம் திரைப்படம் கேரளாவில் ஆல் டைம் ரெக்கார்டாக 35 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை தொடர்ந்து வரும் நிலையில், மொத்தமாக 360 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அதிகபட்சமாக 400 கோடி வரை விக்ரம் படத்தின் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











