விக்ரம் 50 வது நாள்..மேக்கிங்ல கூட என் பேர் வரவில்லை..வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. Agent Tina நெகிழ்ச்சி

சென்னை: கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தின் டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார் ஏஜென்ட் டினா என்கின்ற வசந்தி.

லாபம் கொடுத்த விக்ரம்

லாபம் கொடுத்த விக்ரம்

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தியதுடன், ஆஸ்திரேலியா,அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் மிகுந்த அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் அள்ளியதாகவும் கூறுகின்றனர்.

இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி, மாஸ்டர் படத்தின் மூலம் தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். தற்போது விக்ரம் படத்திற்கு பிறகு மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளார் லோகேஷ். தற்போது தளபதி 60 படத்தில் படு பிஸியாக இருக்கும் லோகேஷ் அந்த படம் முடிந்த பிறகு விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்க உள்ளார்.

படத்திற்கு ட்விஸ்ட்

படத்திற்கு ட்விஸ்ட்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் ஹாசனுக்கும் இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது. ஒவ்வொரு நடிகர்களும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து படத்திற்கு பலம் கூட்டி இருந்தனர். வீட்டில் வேலை செய்யும் பாவப்பட்ட பெண் போல் நடித்துள்ள வசந்தி (ஏஜென்ட் டினா), குழந்தையை பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறார். திடீரென எதிரிகள் வீட்டைச் சூழ, குழந்தையை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்ற மிகப் பெரிய ட்விஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

பதைபதைக்கும் காட்சி

பதைபதைக்கும் காட்சி

யாரும் எதிர்பார்க்காத சண்டை காட்சி நெஞ்சை பதப்பதைக்க வைத்தது என்று சொன்னால் அது மிகைஆகாது. குரூப் டான்ஸ் ஆக இருந்த வசந்திக்கு, விக்ரம் படத்தில் மிகப்பெரிய ரோல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்தி, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பைப் பற்றியும், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். பல அஜித் படங்களிலும், விஜய் படங்களிலும் குரூப் டான்ஸ்சர்களில் ஒருவராக இருந்து வந்த இவருக்கு ஏஜென்ட் டினா கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

Recommended Video

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்? Lokesh Kanagaraj Pressmeet | Kamal | Vikram
பிரபலமான டினா

பிரபலமான டினா

இந்த வாய்ப்பை பற்றிவசந்தி (ஏஜென்ட் டினா) கூறுகையில்," டான்ஸராக நாங்க டான்ஸ் ஆடும் பொழுது எங்களது முகம் மேக்கிங் விடீயோவிலும்,ட்ரெய்லரில் கூட வெளியே தெரியாது. ஒரு சீனிலாவது வெளியே முகம் தெரிகிறதா என்று உற்று உற்றுப் பார்ப்பேன். கடைசியில் பெயர் மட்டுமே வரும். இத்தனை பாடல்களில் டான்ஸ் ஆடி ஆகாத பிரபலம் இந்த ஒரு படத்தில் எனக்கு கிடைத்துள்ளது என்று தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X