சியான் 60 படப்பிடிப்பு...ஜுலையில் மீண்டும் துவக்கம்
சென்னை : நடிகர் விக்ரமின் 60 வது படமாக தயாராகி வருகிறது சியான் 60. இதில் விக்ரம் முதல் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கார்த்திக் சுப்பராஜ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில் லாக்டவுன் காரணமாக சியான் 60 படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டன.

ஜுலையில் சியான் 60 படப்பிடிப்பு
தற்போது தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு வேலைகளை ஜுலை மாதத்தில் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் படமாக்கப்படும் காட்சிகள்
லாக்டவுன் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு படப்பிடிப்பை துவக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் கூறி இருந்தார். விக்ரம், வாணி போஜன் நடிக்கும் காட்சிகளை விரைவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட இசையமைப்பாளர்
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வரும் சியான் 60 படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார் என சொல்லப்பட்டது. இதற்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டுள்ளார்.

விக்ரம் தான் வில்லனா
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ பேனரில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். ஆக்ஷன் கலந்த பழிவாங்கும் கதையாக சியான் 60 உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விக்ரம் வில்லன் கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











