twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்ஹாசனின் தீராபசி.. விக்ரம் சுவாரசியத்தை சொன்ன ஆர்ட் டைரக்டர்!

    |

    சென்னை : சினிமா தொழில்நுட்பத்தில் 10 வருடத்திற்கு முன் இருக்கிறார் கமல், அவரிடம் பல விஷயங்களை நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டோம் என விக்ரம் பட ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

    Recommended Video

    சஸ்பென்ஸை உடைத்த கமல் | Vikram | Kamal Hassan #PressMeet

    இப்படம் ஜூன் 3 ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் மே29ந் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

    ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளில் விக்ரம் ரிலீஸ்..என்ன காரணம்?..கமல் சொன்ன பதில் ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளில் விக்ரம் ரிலீஸ்..என்ன காரணம்?..கமல் சொன்ன பதில்

    இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

    விக்ரம்

    விக்ரம்

    மாஸ்டர் வெற்றிப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யூஏ சான்றிதழ்

    யூஏ சான்றிதழ்

    இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பத்தல பத்தல பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், விக்ரம் படம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. படம் வெளியீட்டிற்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், விக்ரம் படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.

    சிலிக்கான் கண்ணாடி

    சிலிக்கான் கண்ணாடி

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய சதீஷ் குமார், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், விக்ரம் திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். அதில், சினிமா தொழில்நுட்பத்தில் 10 வருடத்திற்கு முன்னோடியாக கமல் இருக்கிறார். எங்களுக்கு தெரியாத சில விஷயங்களை கமல் சாரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். ஒரு சண்டை காட்சியின் போது கண்ணாடி உடைச்சி ஆள் மீது விழனும், இதற்கு நாங்கள் வழக்கமாக கண்ணாடி மாதிரிதெரிய பிளாஸ்டிகை நியூஸ் பண்ணோம். இதைப்பார்த்த கமல், அடுத்த நாளே மும்பையில் இருந்து ஒரு சிலிக்கான் கண்ணாடிய வர வச்சாரு அப்படி ஒரு கண்ணாடி இருக்குன்னு எங்க எல்லாருக்கும் அப்ப தான் தெரியும் என்றார்.

    ஒரு சீனுக்கு 500 கன்

    ஒரு சீனுக்கு 500 கன்

    இந்த படத்துல 70 விதமா 1000 துப்பாக்கி பயன்படுத்தி இருக்கோம் ஒரு சீன்ல 500 துப்பாக்கி வரும், கமல் சார் ஃபயர் பண்ற பெரிய துப்பாக்கி ஒரிஜினலா அவருக்காக செஞ்சோம், அதுல மெக்கானிசம் இருக்கு புல்லட் தெரிச்சி வெளிவரும் எவ்வளவு ஸ்பீடு வேணாலும் வச்சிக்கலாம் என விக்ரம் படம் குறித்து பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

    English summary
    Vikram Art Director interview : சினிமா தொழில்நுட்பத்தில் 10 வருடத்திற்கு முன் இருக்கிறார் கமர். ஆர்ட் டைரக்டர் பேட்டி
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X