சென்னையில் நடைபெறும் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீடு...ரஜினி, விஜய் வருகிறார்களா?

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்துள்ள படம் விக்ரம். இந்தப் படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜூன் மாதம் 3ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

வரவேற்பை பெற்ற பாடல்

வரவேற்பை பெற்ற பாடல்

இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இரு தினங்களுக்கு முன்பு வெளியான பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கமல் தன்னுடைய வாய்சில் பாடியுள்ள இந்தப் பாடலில் அவரது ஆட்டமும் வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய கேரக்டரில் சூர்யா

முக்கிய கேரக்டரில் சூர்யா

இந்தப் படத்தில் சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் படக்குழுவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ரயில்களில் விக்ரம் பட போஸ்டர்

ரயில்களில் விக்ரம் பட போஸ்டர்

லோகோ ரயில்களில் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ரசிகர்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், நாளை மறுதினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நடைபெறவுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த இசை வெளியீடு நடக்கவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீடு

இசை வெளியீடு

மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியாக உள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை தயாரித்து அவர் நடித்து வருகிறார்.

Recommended Video

Blade என்றாலே.. பக்கிரிதானா? சர்ச்சையாகும் பத்தல பத்தல பாடல்! | KamalHaasan - Vikram
பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸ்

பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸ்

மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ ரிலீசை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த கமல் முடிவு செய்துள்ளார். இதனிடையே சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் இந்த ஆடியோ வெளியீட்டில் கலந்துக் கொண்டால் அது படத்தின் பிரமோஷனுக்கு மிகவும் சிறப்பாக உதவி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X