விக்ரம் ஆடியோ ரிலீஸ்... மரண மாசாக காத்திருக்கும் ரசிகர்கள்... எப்படி தயாராகறாங்க பாருங்க!
சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் நாளைய தினம் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் எப்போதுமே தன்னுடைய கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்த மெனக்கெடுவார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் நடித்தால் அது பிரம்மாண்டமாக ரசிகர்களுக்கு பிடித்தமானதாக மாறிவிடும். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கம்
இந்தப் படத்தை கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக உள்ள நிலையில், அவர் கமலை எப்படி இயக்கியுள்ளார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாக உள்ளது.

ட்ரெயிலர், இசை வெளியீடு
இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியாக உள்ளது.

ரஜினி, விஜய், சூர்யா பங்கேற்பு?
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய் மற்றும் சூர்யா ஆகியோரும் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இது அமையும்.

சிறப்பான பிரமோஷன்
இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. லோகோ ட்ரெயின்களில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
Recommended Video

செட் அமைக்கும் பணி
இந்நிலையில் நாளைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டிற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்களை படக்குழு தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications