ரெடி.. ஒன் டூ த்ரீ.. “விக்ரம்“ புக்கிங் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை : ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டி உள்ள விக்ரம் படத்தின் டிக்கெட் எப்போது கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்தின் புரமோஷன் வேலைகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

விக்ரம்

விக்ரம்

கைதி, மாஸ்டர் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ளதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரம் காட்டி உள்ளது. இப்படத்தின் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் ,காடுனு ஒன்னு இருந்த , சிங்கம், புலி, சிறுத்தை என அதிரடியான வசனத்துடன் டிரைலர மிரட்டலாக இருந்தது. டிரைலரை பார்த்து மிரட்டுபோன ரசிகர்கள் விக்ரம் படத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

ஜூன் 3ந் தேதி

ஜூன் 3ந் தேதி

விக்ரம் திரைப்படம் ஜூன் 3ந் தேதி வெளியாக உள்ளதால், படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது. இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தல பத்தல என தொடங்கும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து , வெளியான இரண்டாவது பாடல் போர்கண்ட சிங்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

புலனாய்வு அதிகாரியா

புலனாய்வு அதிகாரியா

அதிரடி அக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் கமல்ஹாசன் அமர் என்கிற புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்கொலைகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் கமல். கதைப்படி கமல், அமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், விக்ரம் யார் என்ற கேள்வி எழுந்து ரசிகர்களின் ஹாட் பீட்டை எகுறவைத்துள்ளது.

டிக்கெட் புக்கிங்

டிக்கெட் புக்கிங்

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமலின் திரைப்படம் வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் போட்டி போட்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், வரும் மே29ந் தேதியிலிருந்து அதாவது ஞாயிற்றுக்கிழமை முதல் விக்ரம் திரைப்படத்தின் டிக்கெட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனிலோ அல்லது தியேட்டருக்கு நேராக சென்றோ புக் செய்து கொள்ளலாம். இந்த தகவலால் கமல் ரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X