விக்ரமுடன் மோதும் சூர்யா... வேடிக்கை பார்க்கும் விஜய் அஜித்?

By Shankar

தீபாவளி ரேஸில் குதிக்கப்போகும் படங்களே இன்னும் உறுதியாகாத நிலையில் 2018 பொங்கலுக்கு களம் இறங்கும் படங்கள் இப்போதே மோதலுக்கு தயாராகிவிட்டன.

பொங்கல் ரிலீஸ் என்று முதலில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை அறிவித்தார்கள். தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சூர்யாவுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

Vikram to clash with Surya

இந்தப் படம் தொடங்கியதில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முதலில் ஸ்பெஷல் 26 ரீமேக் என்றார்கள். இப்போது எடுத்த படம் சரியில்லை என்று மீண்டும் ஷூட்டிங் சென்று வந்திருப்பதாகவும் செய்தி வருகிறது. எது எப்படியோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள்.

தானா சேர்ந்த கூட்டத்துடன் மோதவிருப்பது விக்ரம் - தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச். வடசென்னை பின்னணியில் நடக்கும் இந்த கதையில் நான்கு டீன் ஏஜ் பையன்கள் தான் வில்லன்களாம். அதாவது நான் மகான் அல்ல போல...

சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் ஏற்கனவே ஆகாது என்று ஒரு வதந்தி ஓடுகிறது. எனவே பொங்கலன்று நடக்கும் மோதலை ஆவலோடு எதிர்பார்த்து வேடிக்கை பார்க்கிறார்கள் விஜய்யும் அஜித்தும்.

இருவருக்கும் எந்த படமும் இல்லை பொங்கலுக்கு...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X