அப்பான்னா இவர் அப்பா: விக்ரம் ரொம்பத் தெளிவு தான்
Recommended Video
சென்னை: கபிர் சிங் படத்தை பார்த்தவர்கள் விளாசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆதித்ய வர்மா பற்றி விக்ரம் விளக்கம் அளித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்தில் வந்த சில காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தை பார்த்தவர்கள் அதை விளாசித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை அறைவது தான் காதலா, நிஜத்தில் அப்படி எதுவும் இல்லையே. படத்தில் ஏன் இப்படி போலித்தனம் என்று கேட்டு விளாசுகிறார்கள்.

கபிர் சிங்
ஏற்கனவே விமர்சகர்கள் கபிர் சிங் படத்தை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கபிர் ப்ரீத்தியை அறைந்ததற்கு காரணம் உள்ளது. காதலிப்பவர்கள் ஒருவரையொருவர் அறைவதற்கு, தொடுவதற்கு கூட உரிமை இல்லை என்றால் அது என்ன காதல் என்று கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி. அவரின் பேட்டியை பார்த்த பிரபலங்கள் என் கணவர் என்னை ரொம்ப காதலிக்கிறார், ஆனால் இது வரை அடித்தது இல்லை. உங்கள் லாஜிக்கில் தீயை வைக்க என்று சந்தீப் வாங்காவை வறுத்தெடுக்கிறார்கள்.

விக்ரம்
அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் விக்ரமின் மகன் த்ருவ் நடித்துள்ளார். கபிர் சிங்கை மக்கள் வறுத்தெடுக்கும் நேரத்தில் ஆதித்ய வர்மா ரொம்ப நல்லவர், வல்லவர், அப்பாவி என்று பரிந்து பேசியுள்ளார் விக்ரம். ஆதித்ய வர்மா அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் போன்று இல்லாமல் சாஃப்ட் ஆனவர் என்கிறார் விக்ரம்.

த்ருவ்
ஆதித்ய வர்மா படத்திற்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பாது. விஜய் தேவரகொண்டா, ஷாஹித் கபூருடன் ஒப்பிடும்போது த்ருவ் ஒரு கல்லூரி மாணவராகத் தான் தெரிவார். இந்த கதாபாத்திரத்திற்கு த்ருவ் சரியானவர் என்று சந்தீப் வாங்கா ரெட்டியே தெரிவித்தார். கபிர் சிங், அர்ஜுன் ரெட்டி போன்று இதில் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இருக்காது என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

வர்மா
ஆதித்ய வர்மா படத்தை சந்தீப் வாங்கா ரெட்டியின் உதவியாளரான கிரிசாயா இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை பனிடா சந்து த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். முன்னதாக இந்த படம் வர்மா என்ற பெயரில் பாலாவால் எடுக்கப்பட்டு தயாரிப்பாளர்களின் அதிருப்தியால் கைவிடப்பட்டது. அதன் பிறகே கிரிசாயா இந்த படத்தை முதலில் இருந்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











