Thangalaan - என்னது டூப் போடுறீங்களா.. தங்கலானில் தீவிரமாக மறுத்த விக்ரம்

சென்னை: Thangalaan (தங்கலான்) தங்கலான் படத்தில் விக்ரமுக்கு டூப் போட பா.இரஞ்சித் திட்டமிட்டிருந்ததாகவும் அதற்கு விக்ரம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.

Vikram Denied the dupe artist for thangalaan movie

தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

தங்கலான் மேக்கிங்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஹீரோ சியான் விக்ரம் தனது 57ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அதனையொட்டி தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை பா.இரஞ்சித் வெளியிட்டார். அதனைப் பார்த்த ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் ஆச்சரியத்தில் வாய் அடைத்து போயிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் தமிழின் பெருமைமிகு படமாக இருக்கும் என ஆருடம் கூறிவருகின்றனர். படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

விக்ரமுக்கு கண்டிப்பாக ஹிட்: விக்ரம் சமீபகாலமாக ஹிட்டுக்கு திணறிக்கொண்டிருக்கிறார். சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தாலும் அவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அவர் பா.இரஞ்சித்துடன் இணைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது படம் வேறு ரகத்தில் உருவாவது உறுதியாகிறது. எனவே இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட் படமாக அமையும் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Vikram Denied the dupe artist for thangalaan movie

விலா எலும்பு முறிவு: இதற்கிடையே இந்தப் படத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்துவருகிறார். கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறியும், தங்கலான் படத்தின் கதையும் விக்ரமிடமிருந்து அப்படி ஒரு உழைப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஷூட்டிங்கில் நடித்தபோது விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

டூப்புக்கு மறுத்த விக்ரம்: இந்நிலையில் தங்கலான் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தில் ஏகப்பட்ட ரிஸ்க் காட்சிகள் இருக்கின்றனவாம். எனவே விக்ரமுக்கு டூப் போட இரண்டு பேரை பா.இரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தாராம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விக்ரம் அந்த இருவரையும் பார்த்து யார் அவர்கள் என் கெட் அப்பில் இருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு உங்களுக்கான டூப் என பா. இரஞ்சித் தெரிவிக்க, உடனடியாக மறுத்த விக்ரம், தானே நடிக்கிறேன் என கூறி பல காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தாராம். இதன் காரணமாக அந்த இரண்டு பேரையும் பா.இரஞ்சித்தால் பயன்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X