Vikram - ரஜினி படத்துக்கு நோ சொன்ன விக்ரம்.. லைனில் வந்த அந்த நபர்.. என்ன நடந்தது?

சென்னை: Vikram (விக்ரம்) ரஜினி படத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை நடிகர் விக்ரம் முதலில் தீவிரமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் துவண்டிருக்கும் ரஜினிக்கு ஜெயிலர் புத்துணர்ச்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vikram denies the Rajini Movie Opportunity

லால் சலாம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும் மொத்தம் 50லிருந்து 60 நிமிடங்கள்வரை ரஜினி திரையில் தோன்றுவார் என தெரிகிறது. விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அப்செட்டில் ரஜினி: படத்தின் முதல் ஷெட்யூலை தமிழ்நாட்டில் முடித்த படக்குழு அடுத்த ஷெட்யூலை மும்பையில் ஆரம்பிக்க திட்டமிட்டது. அந்த ஷெட்யூலில்தான் ரஜினியும் பங்கேற்கவிருக்கிறார் என கூறப்பட்டது. ரஜினியும் மும்பை சென்றார். ஆனால் ஒரு சில காரணங்களால் அங்கு ஷூட்டிங்கை நடத்த முடியவில்லையாம். இதன் காரணமாக அப்செட்டான ரஜினி தமிழ்நாடு திரும்பியிருக்கிறார். அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளை வெந்து தணிந்தது காடு படத்துக்கா ஈவிபியில் போடப்பட்டிருந்த மும்பை செட்டில் படமாக்கப்போக்கிறார்களாம்.

ரஜினியின் அடுத்த படம்: ரஜினி பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கும் படம் என்றால் அது ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலுவுடன் இணையும் படம்தான் என்கிறார்கள் பலர். ஏனெனில் ஜெய்பீம் மூலம் ஞானவேல் ஈர்த்த கவனம் ரொம்பவே முக்கியத்துவமானது, இதன் காரணமாக அவருடன் இணைந்திருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிற்து.

இதுவும் உண்மை சம்பவமா?: ஜெய் பீம் படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருந்தார் ஞானவேல். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியுடன் இணையும் படத்தையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ஜெய் பீம் இயக்குநருடன் இணையும் படம் நிச்சயம் தனக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுக்கும் என காத்திருக்கிறாராம் ரஜினி.

நோ சொன்ன விக்ரம்: இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமை அணுகினாராம் இயக்குநர் ஞானவே. ஆனால் விக்ரம் ரொம்பவே தீவிரமாக மறுத்துவிட்டாராம். ஒரு நாள் முழுக்க விக்ரம் வீட்டில் அமர்ந்து அவரை ஒத்துக்கொள்ள வைக்க ரொம்பவே முயற்சித்தாராம் ஞானவேல்.

விக்ரம் இசைந்துவரவில்லையாம். இதனையடுத்து லைகா சுபாஸ்கரன் விக்ரமை நேரடியாக தொலைபேசியில் அழைத்து, 50 கோடி ரூபாய் ஒரே தவணையில் தருகிறேன் என கூறியிருக்கிறார். இதனால் விக்ரம் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X