விக்ரம்... மகேஷ்பாபு படத்தில் வில்லனா?... மேனேஜர் சொல்லும் தகவலை கேளுங்கள்!

சென்னை : தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக பரவி வரும் செய்திக்கு விக்ரமின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.

மகான் திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் விக்ரம் நடித்து இருந்ததால் மகேஷ்பாபுவின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகின.

இந்த செய்தி கிட்டதட்ட அனைத்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகக்பெரிய அளவில் வைரலானது.

மகான்

மகான்

நடிகர் விக்ரமின் 60-வது படம் மகான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.

நெகட்டிவ் ரோல்

நெகட்டிவ் ரோல்

மகான் திரைப்படத்தில் விக்ரம் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருந்தார் விக்ரம். இப்படத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும் படம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தது.

வில்லனாக

வில்லனாக

இதையடுத்து, மகேஷ் பாபுவின் 28வது படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதரபாத்தில் நடைபெற்ற நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் வெளியாகின.

அனைத்தும் வதந்தியே

அனைத்தும் வதந்தியே

இந்த நிலையில், விக்ரமின் மேனேஜர் ட்விட்டர் மூலம் ஒரு விளக்கமளித்துள்ளார். அதில் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் வதந்தியே. இது ஒரு உறுதி செய்யப்படாத தகவல். பத்திரிக்கைகள் தயவு செய்து இது போன்ற செய்திகளை வெளியிடும் போது எங்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடவும் என்று கேட்டுக் கொள்கிறோம்"என்று கூறப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X