விஜய் கூட இன்னும் எத்தனை படம் வேணா பண்ண நான் ரெடி.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்!

சென்னை: விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பல மீடியாக்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ஒரு பக்கம் கமல்ஹாசன் ரயில் முதல் புர்ஜ் கலிஃபா டவர் வரை புரமோஷன் செய்து அசத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் தனது மனதை திறந்து வெளிப்படையாக பல விஷயங்களை பேசி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யுடன் இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ண நான் ரெடி என அவர் பேசியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வித்தியாசமான விஜய்

வித்தியாசமான விஜய்

மாஸ்டர் படத்தின் முதல் பாதியில் இதுவரை ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான விஜய்யை கண் முன் நிறுத்திய இடத்திலேயே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கல்லூரியில் கண்ணாடி போட்டுக் கொண்டு தூங்குவது, மாணவன் மோதி கீழே விழுவது என நடிப்பில் ஏகப்பட்ட வெரைட்டிகளை கொடுத்திருந்தார் விஜய்.

சந்தோஷத்தில் லோகேஷ்

சந்தோஷத்தில் லோகேஷ்

கமல்ஹாசனின் விக்ரம் படம் ரிலீசான ஆண்டில் பிறந்து, கமல்ஹாசனை மானசீக குருவாக ஏற்று 3 படங்களை இயக்கி முடித்த நிலையில், 4வது படத்தை அதே கமலை வைத்து விக்ரம் எனும் டைட்டிலில் இயக்குவேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை என தனது பேட்டிகளில் பூரிப்புடன் பேசி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

பாசிட்டிவ் விமர்சனம்

பாசிட்டிவ் விமர்சனம்

படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் 'பிளாக்பஸ்டர்' என தனது முதல் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். விக்ரம் படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தான் அதனை பெரிய அளவில் கொண்டு செல்ல இப்படி ஓடோடி புரமோஷன் செய்து வருகிறார் கமல்ஹாசன். அதற்காகவே ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

தளபதி 67

தளபதி 67

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தையே விஜய் ரசிகர்கள் மறந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்தின் அப்படியொரு எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றனர். விக்ரம் படத்தின் வெற்றிக்கு சூர்யா ரசிகர்கள் ஒரு புறம் துணை நின்றால், லோகேஷுக்காக விஜய் ரசிகர்கள் எப்போதும் போல துணை நிற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை படம்னாலும்

எத்தனை படம்னாலும்

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்னொரு படம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை படம்னாலும் விஜய் அண்ணா கூட பண்ண ரெடி என மனம் திறந்து பேசியுள்ளார். மேலும், தான் டிப்ரெஷனாக இருக்கும் போது விஜய்யிடம் பேசினாலே தனது மனச்சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் என்று கூறியிருப்பது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிறந்தநாளில் அறிவிப்பு

பிறந்தநாளில் அறிவிப்பு

இந்த மாதம் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் நிலையில், கண்டிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஃபர்ஸ்ட் லுக்குடன் தளபதி 67 படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என அனைத்து விஜய் ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X