மணிரத்னம் பின்னாலேயே போகும் விக்ரம்: ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை:மணிரத்னம் படத்தில் நடிக்கும்போது தான் செய்யும் ஒரு விஷயம் குறித்து தெரிவித்துள்ளார் சீயான் விக்ரம்.
ராஜேஷ் செல்வா இயக்கத்தில், கமல் ஹாஸன் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்குமாறு விக்ரமிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

விக்ரம்
மணிரத்னம் தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் ஸ்க்ரிப்ட்டை விக்ரமிடம் கூறியதுமே அவருக்கு பிடித்துவிட்டதாம். தனது கதாபாத்திரம் குறித்து மணிரத்னம் தெரிவித்த விபரங்களை கேட்ட விக்ரம் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ரொம்பவும் வித்தியாசமான கதாபாத்திரம் மட்டும் அல்ல வெயிட்டானதும் கூட. இந்நிலையில் இந்த படத்திற்காக தனது உடல்வாகை மாற்றும் வேலையில் இறங்கிவிட்டார் சீயான்.

சீயான்
படத்திற்காக உடல் எடையை ஏற்றி இறக்குவது விக்ரமுக்கு ஒன்றும் கஷ்டம் அல்ல. சேதுவில் ஆரம்பித்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். ஷங்கரின் ஐ படத்திற்காக அவர் எலும்பும் தோலுமான ஆனதை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்கிறார். அந்த கதாபாத்திரமாகவே மாறி அவர் அசத்திவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

காட்சி
மணிரத்னத்துடன் வேலை செய்வது குறித்து விக்ரம் கூறியதாவது, மணிரத்னம் படத்தில் நடித்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவருடன் சேர்ந்து வேலை செய்யும்போது என் காட்சி முடிந்த உடன் ஒரு இடத்தில் இருக்க மாாட்டேன். அவர் தனது குழுவிடம் என்ன சொல்கிறார், செய்கிறார் என்பதை பார்க்க அவர் பின்னாலேயே செல்வேன். அவர் படத்தில் நடிப்பது தனி அனுபவம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா
விக்ரம் ஏற்கனவே மணிரத்னத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராவணன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பச்சனும் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமலா பாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











