விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது.. அவரை ஒரு நடிகன் என்று ஒத்துக்க மாட்டேன்!
சென்னை: நீ வருவாய் என என்ற சூப்பர்ஹிட் வெற்றிப் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன்
அதைத்தொடர்ந்து சரத்குமார், விக்ரம், குஷ்பூ, தேவயானி ஆகியோரின் நடிப்பில் வெளியான விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார்
முதல் இரண்டு படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காத ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் ஒரு நடிகரே கிடையாது அவருக்கு நடிக்கவே தெரியாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீ வருவாய் என
சூரிய வம்சம்,புது வசந்தம், வானத்தைப்போல ,பூவே உனக்காக என பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு பறைசாற்றியவர் இயக்குனர் விக்ரமன். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் நீ வருவாய் என.

விண்ணுக்கும் மண்ணுக்கும்
மாறுபட்ட காதல் கதையில் பார்த்திபன்,அஜித்,தேவயானி என முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் என எந்த ஒரு சாயலும் இல்லாமல் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான நீ வருவாய் என பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் பிறகு ராஜகுமாரன் தன்னுடைய இரண்டாவது படமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார்

வெற்றிப்படமாக அமையவில்லை
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் அந்த அளவிற்கு வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே அதன் பிறகு ராஜகுமாரன் எந்த படத்தையும் இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடியனாக நடித்து அறிமுகமான ராஜகுமாரன் கடுகு படத்தில் ஹீரோவாக நடித்து மிரட்டியிருப்பார்.

வெட்டுகுத்து லெவலில் பிரச்சினை
இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராக அவதாரம் எடுத்துள்ள ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். திரைத் துறையில் தான் பயணித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வந்த ராஜகுமாரன் ஒரு கட்டத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும்போது சரத்குமாருக்கும் தனக்கும் வெட்டுகுத்து லெவலில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது உண்மைதான் ஆனால் விக்ரமுடன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை இன்றும் நாங்கள் நண்பர்களாக தான் இருக்கிறோம்

விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது
ஆனால் நடிகர் விக்ரம் ஒரு பேட்டி ஒன்றில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார். அதில் முற்றிலும் நான் மாறுபட்டு இருக்கிறேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் நடித்த பொழுது விக்ரம் அவ்வளவு பெரிய நடிகர் ஒன்றுமில்லை.
அப்போது அவருக்கு சேது என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெற்றி படமாக இருந்தது அதுவும் பத்திரிக்கையாளர்களால் மட்டுமே பாராட்டப்பட்டது குடும்ப ஆடியன்ஸ் யாரும் அந்த படத்தை கொண்டாடவில்லை.

நடிகன் என்று ஒத்துக்க மாட்டேன்
விண்ணுக்கும் மண்ணுக்கும் படம்தான் விக்ரமுக்கு குடும்ப ஆடியன்ஸை பெற்றுத்தந்த முதல் படம். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும்போது விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது. விக்ரமை நடிகர் என்று நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் விக்ரமால் ஒரு காட்சி கூட நடிக்க முடியாது. இவ்வாறு விக்ரமை இயக்குனர் ராஜகுமாரன் கடுமையாக விமர்சித்துள்ள அந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications