மூம்மூர்த்திகளாக மாறிய கமல் - சேதுபதி - பகத்.. விருமாண்டி மாதிரி இருக்கே என கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: உலகநாயகன் கமலின் 232வது படமான விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஆரம்பிக்கலாங்களா என விக்ரம் டைட்டிலை வெளியிட டீசரையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நிலையில் மீண்டும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்கில் கமல், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசிலை பார்த்த ரசிகர்கள் விருமாண்டி படத்தின் போஸ்டர் போல இருக்கிறதே என கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

தலைவா
இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிக்கவுள்ள விக்ரம் படத்தின் படு மாஸான ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து தலைவா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வீட்டில் இருந்தபடியே கத்தி கொண்டாடி வருகின்றனர்.

மொரட்டு சம்பவம்
விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகி விட்டார் என வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு சம்பவம் ஆண்டவரே என கமெண்ட் அடித்து காலரை தூக்கிவிட்டு வருகின்றனர்.

விஸ்வரூபம் காட்டு
மும்மூர்த்திகளை போல கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் இருக்கும் விக்ரம் பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த கமல் ரசிகர்கள், "அச்சம் தவிர்.... நையப் புடை.... விஸ்வரூபம் காட்டு.... தமிழா...." என ட்வீட் போட்டு தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விருமாண்டி மாதிரியே
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படியே விருமாண்டி படத்தின் போஸ்டர் போலவே இருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்தாலும், அதனை காப்பி என்று சொல்லாமல் வழக்கம் போல இன்ஸ்பிரேஷன் என பதிவிட்டு, பக்கா ஆக்ஷனா இருக்கணும் ஆண்டவா என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











