Dhruva natchathiram movie: பேஸ்மெண்ட் டீம்.. வெளியானது துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம்.

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்தப் படத்தை கடந்த ஆண்டில் தூசி தட்டி தற்போது அடுத்த மாதம் 24ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார் கௌதம் மேனன்.

Vikram -Gautham menon combination Dhruva natchathiram movie new trailer released

விக்ரமின் துருவ நட்சத்திரம் படம்: நடிகர் விக்ரம் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் ஜான் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. 2018ம் ஆண்டில் படம் ரிலீசாகவிருந்த நிலையில் சில பல பிரச்சினைகளால் படம் முடங்கியது. இதையடுத்து இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கௌதம் மேனன், இந்தப் படத்தை கடந்த ஆண்டில் மீண்டும் தூசி தட்டினார்.

ஸ்டைலிஷ்ஷான விக்ரம்: படத்தில் ஒருசில மாற்றங்களை அவர் செய்துள்ளதாகவும் படத்தில் முன்னதாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பாடலில்கூட ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ட்ரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டைலிஷ்ஷான விக்ரம் மட்டுமில்லாமல் வில்லன் விநாயகனும் ஸ்டைலிஷ்ஷாக காணப்படுகிறார்.

தி பேஸ்மெண்ட் டீம்: ரூல்சில் சிக்காத ஒரே சிந்தனையுடைய 11 பேரை தேர்ந்தெடுத்து தி பேஸ்மெண்ட் டீம் என்று அமைக்கப்படுவதாக இந்தத் ட்ரெயிலரில் காட்டப்படுகிறது. இதில் முக்கியமானவராக விக்ரம் செயல்படுவதாகவும் காட்டப்படுகிறது. தன்னுடைய டீமிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என பெயர் என்று விநாயகனிடம் விக்ரம் கூறுவதாகவும் உள்ளது. கௌதம் மேனனும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சர்வதேச அளவில் கிரிக்கெட் ஆட என்னவெல்லாம் தேவை என்பதாக அவர் கூறுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

துருவ நட்சத்திரம் ட்ரெயிலர்: இந்தப் படத்தின் ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள பல டயலாக்குகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. கிரிக்கெட் டீம் மாதிரி 11 பேர் இருந்த நல்லாருக்கும் போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அடுத்தமாதம் 24ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெயிலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த ட்ரெயிலரை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Vikram -Gautham menon combination Dhruva natchathiram movie new trailer released

துருவ நட்சத்திரம் 2: விக்ரமிற்கு இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் வெளியான அவரது பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படங்களுக்கிடையில் நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த துருவ நட்சத்திரம் படமும் ரிலீசாகவுள்ளது விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் நிலையில், படத்தின் அடுத்த பாகத்தை வெளியிடவும் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X