மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்.. பிரச்சினை முடிந்து மீண்டும் துவங்கும் துருவ நட்சத்திரம்!

சென்னை : நடிகர் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள ரிலீசுக்காக லைன் கட்டி காத்திருக்கின்றன.

அவரது கோப்ரா படமும் பொன்னியின் செல்வன் படமும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

இதனிடையே கௌதம் மேனனுடன் விக்ரம் இணைந்திருந்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலங்களாக ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மகான் படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அவருடன் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார். மேலும் சிம்ரன் அவரது மனைவியாக நடித்திருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

இந்தப் படத்தில் காலம்காலமாக போதிக்கப்பட்டு வரும் ஒழுக்கங்களை கேள்விக்குட் படுத்தியிருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கியிருந்த முந்தைய படம���ன ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், மகான் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

கோப்ரா படம்

கோப்ரா படம்

இதனிடையே, விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உ��்ளன.

துருவ நட்சத்திரம் படம்

துருவ நட்சத்திரம் படம்

இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்திலும் விக்ரம் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்கு முன்னதாகவே கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு 90 சதவிகிதம் படம் நிறைவடைந்ததாக கூறப்பட்டது. படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்திருந்தனர்.

 பிரச்சினையால் நின்ற படம்

பிரச்சினையால் நின்ற படம்

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் இந்தப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் விக்ரம் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 கௌதம் மேனன் பதிவு

கௌதம் மேனன் பதிவு

இந்நிலையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திரங்கள் மீண்டும் சேர்வதாக தெரிவித்துள்ளார்.

 விரைவில் சூட்டிங்

விரைவில் சூட்டிங்

இந்தப் படத்தின் 90 சதவிகித சூட்டிங் நிறைவுற்ற நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் முழுமையான நிறைவடைந்து ரிலீசாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விக்ரம் தனது நடிப்பால் அடுத்தடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நிலையில், இந்தப் படமும் ரசிகர்களின் பேவரிட் லிஸ்ட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X