கொல மாஸ் கமல் சாரே.. வெளியானது விக்ரம் கிளான்ஸ்.. லோகேஷ் கனகராஜின் தரமான 'கோட் ரெட்' லோடிங்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் அட்டகாசமான கிளான்ஸ் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு உலகநாயகனுக்கு ஒரு சூப்பரான பில்டப் காட்சி விக்ரம் படத்தில் இருப்பதை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

உலகநாயகன் பிறந்தநாள்

உலகநாயகன் பிறந்தநாள்

உலக நாயகன் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படக்குழுவினர் கிளான்ஸ் காட்சி ஒன்றை ரிலீஸ் செய்து உலக நாயகனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

மாஸ் ஓப்பனிங் சீன்

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 232வது படமாக உருவாகி வரும் விக்ரம் பட கிளான்ஸ் காட்சியை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். கறி சோறு போட்டு ஆட்களை போடுவது போன்ற காட்சி முன்பே வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அதற்கு ஒரு படி மேல் சென்று மாஸ் ஓப்பனிங் காட்சியாக இந்த கிளான்ஸ் இடம்பெற்றுள்ளது.

காப்பாற்றும் கமல்

காப்பாற்றும் கமல்

Code Red என்பது விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், நரேன் உள்ளிட்ட சிலரை சீக்ரெட் செல்லில் இருந்து காப்பாற்றி அழைத்து வரும் ஆப்பரேஷனில் ஈடுபட்டு இருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

விக்ரம் படத்தின் கிளான்ஸ் காட்சி வெளியாகி உள்ள நிலையில், உலக நாயகனை இப்படி படு மாஸாக பார்த்த சந்தோஷத்தில் சினிமா பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் விக்ரம் படத்தின் காட்சியை கொண்டாடி வருகின்றனர். மேலும், உலக நாயகனுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சம்மர் ரிலீஸ்

சம்மர் ரிலீஸ்

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன், பீஸ்ட், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பல படங்களுடன் கமலின் விக்ரம் போட்டியிட போவது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X