Actor Vikram: அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்களை கவரும் விக்ரம்.. அடுத்தது என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் மல்ட்டி ஸ்டார் படமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram going to announce his Chiyaan62 movie announcement this day

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்தப் படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான மல்ட்டி ஸ்டாரர் படமான பொன்னியின் செல்வன் 2 படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த விக்ரம், மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். அவருக்கு முக்கியமான படமாக பொன்னியின் செல்வன் 2 படமும் அமைந்தது.

பொன்னியின் செல்வன் படம்: கடந்த ஆண்டிலும் இந்தப் படத்தின் முதல் பாகம் மற்றும் கோப்ரா படங்கள் வெளியாகியிருந்தன. இதில் பொன்னியின் செல்வன் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக அமைந்த நிலையில் கோப்ரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளன.

தங்கலான் படம்: சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய இந்தக் கதைக்களத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் பா ரஞ்சித். இந்தப் படத்தில் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்களில் வித்தியாசமான விக்ரமை பார்க்க முடிகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாகவும் அடுத்த மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் 62 படம்: இதனிடையே விக்ரமின் 62வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சியான் 62 படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சர்ப்பிரைஸ் என்றும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vikram going to announce his Chiyaan62 movie announcement this day

சியான் 62 பட அறிவிப்பு: இதனிடையே இந்தப் படத்திற்கான ப்ரமோ ஷுட் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை இந்த ப்ரமோ வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. விக்ரமின் இருமுகன் மற்றும் சாமி 2 படங்களை இயக்கிய சிபு தமீன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சித்தா என்ற உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ள அருண்குமார் விக்ரமை தன்னுடைய கதையில் எப்படி பொருத்துவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இநத்ப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கும் மாலை வரை காத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X