வயநாடு துயரம்.. பங்கெடுத்த சியான் விக்ரம்.. எவ்வளவு கொடுத்திருக்காரு பாருங்க
சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது.
கடவுளின் தேசம், பூமியின் சொர்க்கம் என்று கேரளாவை சொல்வார்கள். ரம்யமான இயற்கை சூழல் இருப்பதன் காரணமாக அவ்வாறு அழைப்பது உண்டு. அந்த கடவுளின் தேசத்தில் இருக்கும் மாவட்டமான வயநாடு இப்போது சொல்லொண்ணா துயரத்தில் சிக்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு கடுமையான மழை பெய்துவருகிறது. அந்த மழையால் வயநாடு ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மூன்று கிராமங்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

எப்படி ஆனது?: அதாவது முண்டக்கை என்ற இடத்தில் முதலில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதனையடுத்து 4 மணியளவில் சூரல் மலா, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவுதான் பல உயிர்களை வாரி சுருட்டியிருக்கிறது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவை உணர்வதற்குள் பல குடும்பங்கள் காணாமல் போயின.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பல குடும்பங்கள் காணாமல் போயிருக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்துவந்தாலும் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முக்கியமாக நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 90 கிமீ தூரம்வரை உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிடைப்பதாகவும் திடுக்கிடும்படியான தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் இருக்கிறது.
களத்தில் இறங்கிய நிகிலா விமல்: இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் பிரதமர் மோடி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் அழைத்து உரையாடினார். மேலும் தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு மீட்பு படை சென்று அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கிடையே நடிகை நிகிலா விமலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். நாடு முழுவதுமிருந்து பலரும் தங்களால் முயன்ற உதவியை செய்துவருகிறார்கள்.
விக்ரம் செய்த நிதியுதவி: இந்நிலையில் நடிகர் சியான் விக்ரமும் தன் பங்குக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அதன்படி தனது சொந்தப் பணத்திலிருந்து 20 லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார் அவர். இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











