கோப்ரா நிகழ்ச்சியில் இந்தி பேசிய ஹீரோயின்: வரிந்து கட்டிய விக்ரம், ஆர்ப்பரித்த ரசிகர்கள்

கோவை: விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கோப்ரா படம் வெளியாகவுள்ளதை அடுத்து, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

விக்ரமின் வேட்டை ஆரம்பம்

விக்ரமின் வேட்டை ஆரம்பம்

கடந்த சில வருடங்களாகவே தரமான வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமிற்கு, கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'பொன்னின் செல்வன்', பான் இந்தியா படமாக 5க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அதற்கு முன் விக்ரமின் கோப்ரா வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பல அவதாரங்களில் விக்ரம்

பல அவதாரங்களில் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தில், விக்ரமுடன் 'கேஜிஎஃப்' நாயகி ஸ்ரீந்தி ஷெட்டி ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கோப்ரா படத்திற்கு இசையமைத்துள்ளது, எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் கணித சயிண்டிஸ்ட்டாக பல கெட்டப்புகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களை சந்திக்கும் கோப்ரா டீம்

ரசிகர்களை சந்திக்கும் கோப்ரா டீம்

இந்நிலையில், கோப்ரா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். நேற்று திருச்சி, மதுரையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கோப்ரா டீம் இன்று கோவையில் சங்கமித்தனர். இதனைத் தொடர்ந்து நாளை சென்னையிலும், அதன்பின்னர் கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் ரசிகர்களைச் சந்திக்கின்றனர்.

இங்க இந்தி பேச வேண்டாம்

இங்க இந்தி பேச வேண்டாம்

கோவையில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா டீம், அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். அப்போது படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இந்தியில் பேசினார். உடனே வரிந்து கட்டிய விக்ரம், "தமிழ் படம் பத்தி பேசும் போது இந்தி எதுக்கு, தமிழ்லயே பேசலாமே" என, நாயகிக்கு ஜெர்க் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத ஸ்ரீநிதி ஷெட்டி அப்படியே சைலண்ட் ஆக, எதிரில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். விக்ரமும் அவர்களுக்கு கட்டைவிரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்ட, இன்னும் ரகளையானது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X