ஓடிடிக்கு முன்பே லீக்கானது விக்ரம் HD பிரிண்ட்.. தைரியமாக காட்சிகளை ஷேர் செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை: திருட்டு பிரின்ட் பற்றிய வெப்சீரிஸ் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால், கொஞ்சமும் பயமே இல்லாமல் ஏகப்பட்ட நெட்டிசன்கள் விக்ரம் படத்தின் பைரசி ஹெச்டி பிரின்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சக்கைப் போடு போட்டு வருகிறது விக்ரம் திரைப்படம்.

விரைவில் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளியாகிறது.

விக்ரம் படத்தின் கதை

விக்ரம் படத்தின் கதை

கமல் நடித்த பழைய விக்ரம் படத்தின் கனெக்‌ஷன் மற்றும் கைதி படத்தின் கனெக்‌ஷன் உடன் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய சினிமாட்டிக் யூனிவர்ஸ் படம் தான் விக்ரம். போதைப் பொருளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் உருவான இந்த படம் அசத்தலான மேக்கிங் மற்றும் ஸ்க்ரீன்பிளே, நடிகர்களின் நடிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் 400 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

விக்ரம் ஓடிடி ரிலீஸ்

விக்ரம் ஓடிடி ரிலீஸ்

ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வரும் ஜூலை 8ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இன்னும் ஒரு தினமே எஞ்சியுள்ளது. சமீபத்தில் விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸை முன்னிட்டு கமல் வெளியிட்ட ஒரு புரமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே போல பிக் பாஸ் சீசன் 6க்கும் கமல் புரமோ வெளியானால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு ட்வீட்களை போட்டுத் தாக்கினர்.

HD பிரின்ட் லீக்

HD பிரின்ட் லீக்

அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் விக்ரம் படம் வெளியாகும் முன்னதாகவே அதற்குள் அதன் பைரசி பிரின்ட் இணையத்தில் கசிந்து விட்டது. HD தரத்தில் உள்ள அந்த திருட்டு பிரின்ட்டை ஏகப்பட்ட நெட்டிசன்கள் டவுன்லோடு செய்து பார்த்து வருவது மட்டுமின்றி, தைரியமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த படத்தின் சிறு சிறு காட்சிகளை அப்படியே ஷேர் செய்து வருகின்றனர்.

Recommended Video

Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil
கொஞ்சம் கூட பயமே இல்லை

கொஞ்சம் கூட பயமே இல்லை

விக்ரம் படத்தின் ஏகப்பட்ட காட்சிகளை அப்படியே லீக் செய்து வருகின்றனர் ரசிகர்கள். குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் சூர்யாவின் ரோலெக்ஸ் காட்சிகளை ஏகப்பட்ட சூர்யா ரசிகர்களே தைரியமாக ஷேர் செய்து வருகின்றனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்காதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான பின்னர், கோடிக் கணக்கான சப்ஸ்கிரைபர்கள் அந்த படத்தை பார்க்கத் தான் போகின்றனர் என்றாலும், பைரசியை இளைஞர்கள் ஊக்குவிக்கக் கூடாது என விக்ரம் படத்தின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X