ப்ரைம் ஃபார்முக்கு திரும்பவுள்ள சியான் விக்ரம்.. நம்பிக்கை அளிக்கும் லைன்அப்

சென்னை: தமிழ் சினிமாவின் மகா நடிகர்களில் மிக முக்கியமான ஒருவர் சியான் விக்ரம்.

நடிப்பிற்காக கடினமாக உழைத்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை வியக்க வைப்பார் விக்ரம்.

கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவருடைய அடுத்தடுத்த படங்கள் நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் உள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. Psychological Thriller ஆன இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார் விக்ரம். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு

பெரிய எதிர்பார்ப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி நீண்ட காலம் ஆன நிலையில் படம் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது. வெளியானால் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பு.

மிக பெரிய பட்ஜெட்

மிக பெரிய பட்ஜெட்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இது மணிரத்னத்தின் கனவுப் படமாகும். மிக பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த படம் அதிசயத்தை நிகழ்த்தும் என தெரிகிறது.

விக்ரம் - துருவ் விக்ரம்

விக்ரம் - துருவ் விக்ரம்

கார்த்திக் சுப்புராஜ் சியான் விக்ரமின் 60வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரம் உடன் அவரின் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கிறார். இந்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X