Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகாவீர் கர்ணா... விக்ரம் நடிக்கும் பிரமாண்ட இந்திப் படம்!
Recommended Video
காலத்தை வென்ற காப்பியமான மகாபாரதத்தின் இணையற்ற பாத்திரம் கர்ணன். இந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்பாத நடிகர்களே இருக்க முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவே வாழ்ந்தார் கர்ணன் படத்தில்.
மகாபாரதத்தின் தழுவலாக உருவான தளபதி படத்தில் ரஜினிகாந்த் கர்ணன் சாயல் கொண்ட பாத்திரத்தில் நடித்தார்.
அடுத்து கர்ணன் வேடம் ஏற்கவிருப்பவர் நடிகர் விக்ரம். ஆனால் இந்தப் படம் தமிழில் உருவாகவில்லை. மகாவீர் கர்ணா என்ற தலைப்பில் இந்தியில் மட்டும் உருவாகிறது.
என்னு நின்டே மொய்தீன் என்ற படத்தை இயக்கிய ஆர்எஸ் விமல் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். "படத்தை முழுக்க இந்தியில்தான் எடுக்கிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் டப் பண்ணத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் முழுமையான அறிவிப்பு வரும்," என்கிறார் இயக்குநர் விமல்.
இப்போது துருவநட்சத்திரம், சாமி ஸ்கொயர் படங்களை முடித்துவிட்ட விக்ரம், மகாவீர் கர்ணாவுக்காக புதிய தோற்றத்துக்குத் தயாராகி வருகிறார்.
இந்தப் படம் ரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.