Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
காலைல 7.30க்கு குதிரையில ஏறி மாலை 5.30 மணி வரைக்கும் டயலாக் பேசினாரு.. விக்ரம் டெடிகேஷனை பாருங்க!
சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் பொன்னியில் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.
Recommended Video
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது முடிவடைந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீசுக்கு பின்பு இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் தற்போது விக்ரமின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வலிமை,
பீஸ்ட்
பிளாப்..
லிஸ்ட்
போட்டு
சொன்ன
ப்ளூ
சட்டை
மாறன்..அடுத்த
பஞ்சாயத்து!

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்துவரும் விக்ரம் படங்களுக்காக ரசிகர்கள் தொடர்ந்து வெயிட் செய்துவரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11ல் அவரது கோப்ரா படம் ரிலீசாக உள்ளது.

கோப்ரா இசை வெளியீடு
இந்தப் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியவாறு உள்ளது. வரும் திங்கட்கிழமை படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விக்ரம் பங்கேற்பு
இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ள கோப்ரா இசை வெளியீட்டில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம்
அடுத்ததாக விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. தமிழில் இதை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

சிறப்பான விமர்சனம்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசர் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பான விக்ரம்
இதனிடையே இந்தப் படத்திற்காகவும் வழக்கம் போல விக்ரம் அதிகமான மெனக்கெடல்களை செய்துள்ளது குறித்து படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. படத்தின் சூட்டிங்கின்போது அவர் ஒருநாள் காலை 7.30 மணிக்கு குதிரை மீது ஏறி தொடர்ந்து டயலாக் பேசியுள்ளார். அவர் குதிரையை விட்டு இறங்கும்போது மாலை 5.30 ஆகிவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டீசர் வெளியீட்டில் பங்கேற்க முடியாத விக்ரம்
அந்த அளவிற்கு டெடிகேட்டானவர் விக்ரம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த கேரக்டரை சிறப்பாக்கும் வகையில் விக்ரம் நடித்த நிலையில், இன்றைய தினம் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.