Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒடிடியில் வெறித்தனமாக ஓடும் விக்ரம் படம்.. கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய மகான் படக்குழு!
சென்னை: அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான மகான் திரைப்படம் பலதரப்பு மக்கள் மற்றும் பிரபலங்களிடம் பாராட்டுக்களை பெற்ற நிலையில், மகான் படக்குழு கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மகான்.
3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்!
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டவர்கள் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டிய நிலையில், மகான் படக்குழு வேற லெவல் உற்சாகத்தில் உள்ளது.
மாஸ் காட்டும் மகான்
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கிற்கு பெயர் போன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மிரட்டியுள்ள மகான் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை முன்னிட்டு மகான் படக்குழு தற்போது சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறது.
ரஜினி, விஜய் பாராட்டு
மகான் படம் எக்ஸலன்ட்டாக இருக்கிறது என பேட்ட நாயகன் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு போன் செய்து பாராட்டி உள்ளார். மேலும், நடிகர் விஜய் 7 ஸ்க்ரீன் தயாரிப்பாளருக்கு போன் செய்து மகான் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மகான் படத்தை கொண்டாடி வரும் நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவினரை அழைத்து ஒரு அட்டகாசமான சக்சஸ் பார்ட்டியையும் நடத்தி உள்ளனர். கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சற்று முன்னர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
லிவிங் பிக்
மகான் Living Big என அந்த பிரம்மாண்ட கேக்கில் போடப்பட்டிருப்பதை போல, ஒரு பெரிய கூட்டமே இணைந்து இந்த படத்திற்காக உழைத்துள்ளதை உணர்த்தும் வகையில் ஒட்டுமொத்த மகான் டீம் உடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சியான் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
விக்ரமின் விஸ்வரூபம்
தொடர்ந்து பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்த நிலையில், மகான் திரைப்படம் நடிகர் விக்ரமுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மகான் படம் வெறும் சாம்பிள் தான் என்றும் சியான் விக்ரம் இனிமேல் தான் விஸ்வரூபமே எடுக்கப் போகிறார் என விரைவில் வெளியாக உள்ள அவரது படங்களான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வனை எதிர்பார்த்து சியான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துருவ நட்சத்திரம் படமும் பெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்