15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி சட்டையில் கமல்...சினிமாவில் பிஸியாகிறார்

சென்னை : கடந்த சில மாதங்களாக அரசியல் வேலைகளில் பிஸியாக இருந்த கமல், தற்போது மீண்டும் சினிமா வேலைகளை துவக்க போவதாக கூறப்படுகிறது. 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடிப்பதற்காக தான் கமல் தயாராகி வருகிறாராம்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரெஸ்டாரென்ட் உள்ளே நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சுமார் 60 நாட்கள் வரை நீண்டதாக முதல்கட்ட படப்பிடிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸ் வேடத்தில் கமல்

போலீஸ் வேடத்தில் கமல்

லேட்டஸ்ட் தகவலின்படி, 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில், காக்கி சட்டையில் போலீஸ் வேடத்தில் கமல் நடிக்க உள்ளார். 'தூங்காவனம்' படத்தில் போலீசாக நடித்திருந்தாலும், அதில் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்திருக்க மாட்டார். கடைசியாக 2006 ல் வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் தான் கமல், காக்கிச் சட்டை அணிந்து நடித்திருந்தார்.

ஆர்வத்தை தூண்டிய ஃபகத் ஃபாசில்

ஆர்வத்தை தூண்டிய ஃபகத் ஃபாசில்

'விக்ரம்' படத்தில் கமலுடன் தானும் நடிக்க உள்ளதை மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகரான ஃபகத் ஃபாசில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃபகத் ஃபாசிலை தமிழ் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தில் ஃபகத் ஃபாசில், வில்லனாக நடித்திருந்தார்.

லாரன்ஸிற்கு பதில் யார்

லாரன்ஸிற்கு பதில் யார்

'விக்ரம்' படத்தில் வில்லனாக லாரன்ஸ் நடிக்க உள்ளதாக முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகுவதாக சமீபத்தில் கூறப்பட்டது. லாரன்சிற்கு பதில் விஜய் சேதுபதி அல்லது விஷாலை வில்லன் ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கமலுக்கு வில்லனா ஃகத் ஃபாசில்

கமலுக்கு வில்லனா ஃகத் ஃபாசில்

ஆனால் தற்போது ஃபகத் ஃபாசில், 'விக்ரம்' படத்தில் இணைந்திருப்பதால் ஒருவேளை கமலுக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'வேலைக்காரன்' படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பை பெற்றதால் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு வேடத்தில் நடிக்கிறாரா என தெரியவில்லை.

பாதியில் நிற்கும் இந்தியன் 2

பாதியில் நிற்கும் இந்தியன் 2

அனிருத் இசை அமைக்கும் இந்த படம், இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே சமயம் கமலஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 100 நாட்கள் சூட்டிங் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கில் சிக்கிய ஷங்கர்

வழக்கில் சிக்கிய ஷங்கர்

ஆனால் 'இந்தியன் 2' படம் நிலுவையில் உள்ள நிலையில் ராம் சரணின் 15 வது படத்தை இயக்க போவதாக ஷங்கர் அறிவித்தார். தொடர்ந்து அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டார். இதனால் 'இந்தியன் 2' படத்தை முடிப்பதற்கு முன் வேறு எந்த படத்தையும் ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X