நீங்க 4 பேரும் ராமைத் தேடுவது வேஸ்ட்.. இப்போ அவரு மேகி கூட இருக்காரு.. செம டைமிங் மீம்!
சென்னை: விக்ரம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் #VikramFDFS ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் மற்றும் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாகிறது.
சமீபத்தில் விக்ரம் படத்துக்காக பஞ்ச தந்திர ஸ்டைலில் பக்காவாக விளம்பரப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது அதை வைத்து டைமிங்காக ரசிகர் ஒருவர் போட்டுள்ள மீம் டிரெண்டாகி வருகிறது.

ரெக்கார்டுகள் உடையும்
விக்ரம் படம் வெளியாகும் முன்னதாகவே 200 கோடி ரூபாய் வரை ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், புக் மை ஷோவில் அதிகபட்சமாக 2.2 மில்லியன் ரசிகர்கள் படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளை விக்ரம் படம் முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தெறிக்கும் டிரெண்டிங்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் ஒரே இரவில் நடக்கும் கதையாக விக்ரம் படம் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. கைதி படத்தை போல விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது எனக் கூறுகின்றனர்.

பஞ்சதந்திர புரமோஷன்
விக்ரம் படத்தை வித விதமாக புரமோட் செய்து வருகிறார் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன். பஞ்ச தந்திரம் படத்தில் நடித்த ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த் மற்றும் ஸ்ரீமன் என நால்வரும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து சமீபத்தில் விக்ரம் படத்திற்கான மெர்சலான புரமோஷனை செய்திருந்தனர்.

ராம் இப்போ மேகி கூட
அந்த புரமோஷனில் கூட மேகி பற்றிய பேச்சு வரும் போது, மேகியை பத்தியெல்லாம் இப்போ எதுக்கு பேச்சு என ஜெயராம் சொல்வார். ஆனால், தற்போது, நீங்க நாலு பேரும் ராமை தேடாதீங்க.. அவர் இப்போதும் மேகி உடன் தான் இருக்கிறார் என சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கமல் புகைப்படத்தை வைத்து க்ரீயேட் செய்துள்ள மீம் செம டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











