அடுத்த உலக நாயகனாக ஆக வேண்டியவர் சூர்யா..மேடையில் சொல்லாமல் சொன்ன கமலஹாசன்!

சென்னை : விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன் சூர்யாவை வெகுவாக பாராட்டி பேசினார்.

Recommended Video

அடுத்த உலக நாயகனாக ஆக வேண்டியவர் சூர்யா..மேடையில் சொல்லாமல் சொன்ன கமலஹாசன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடித்த படம் 'விக்ரம்'. கடந்த மாதம் ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் வசூல் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

விக்ரம்

விக்ரம்

விக்ரம் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது. உலக அளவில் 'விக்ரம்' 400 கோடிக்கும் அதிமான வசூலை குவித்து, கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே பெரும் வசூல் சாதனை படைத்த படமாக மாறியிருக்கிறது. விக்ரம். படம் வெளியாகி ஒருமாதம் கழித்து தான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. படத்தின் ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருந்த பலரும், ஓடிடியில் வெளியான இரவே படத்தை பார்த்தனர்.

ரோலக்ஸ்

ரோலக்ஸ்

இந்த படத்தில் சந்தானம் ரோலில் நடித்த விஜய்சேதுபதி,பகத் பாசிலின் நடிப்பு இசை என அனைத்தும் வேறலெவலில் இருந்தது என்று சொல்லலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் 5 நிமிடம் மட்டுமே வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் தரமாக அமைந்து படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்து விட்டது. சூர்யாவின் திரைப்பயணத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

மக்களால் கிடைத்த வெற்றி

மக்களால் கிடைத்த வெற்றி

இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தின் 50 நாட்கள் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக விக்ரம் 50 நிகழ்ச்சியில்,கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது விக்ரம் படம் ரசிகர்களால் தான் வெற்றிபெற்றது. அவர்களால் வெற்றியையும் தரமுடியும் தோல்விகளையும் தரமுடியும் என்றார். எனவே அவர்களை ஈர்க்கும் வகையில் நாம் படம் எடுக்கவேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

அடுத்த உலக நாயகன்

அடுத்த உலக நாயகன்

இதையடுத்து, நாயகன் படத்தில் அனைவரின் மனதைத் தொட்ட கமல் அழும் காட்சி போடப்பட்டது. அந்த காட்சியை பார்த்துவிட்டு பேசிய கமல், இந்த படத்தில் வசனகர்த்தாவாக இருந்த எழுத்தாளர் பாலகுமாரின் மகன் பெயர் சூர்யா, சரவணன் சூர்யாவாக மாறியதும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் ரோலக்சை சொல்கிறேன். விக்ரம் படத்தில் சூர்யா நாயகன் இல்லை இருந்தாலும், அந்த கதாபாத்திரம் அவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளது. அடுத்த நாயகனாக ஆகவேண்டிய ஆளு என நடிகர் கமல்ஹாசன், சூர்யாவை அடுத்த உலக நாயகன் என சொல்லால் கூறி புகழ்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X