’விக்ரம்’..அட 50 நாள் ஆகிவிட்டதா? கமல்ஹாசன் செய்த முறியடிக்க முடியாத சாதனை
சென்னை: விக்ரம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்டது. கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வசூலை வாரிக்கொடுத்த முக்கியமான படங்களில் விக்ரம் முதன்மையான படமாகும்.
நடிகர் கமல்ஹாசன் 36 வருடங்களுக்கு முன் நடித்த விக்ரம் படத்தின் டைட்டிலுடன் அதன் நீட்சியாக வெளியான விக்ரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.
விக்ரம் படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் கடந்துள்ளது. உலக அளவில் இப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது.

திரையுலகில் நடன ஆசிரியர், உதவி இயக்குநராக கமல்
நடிகர் கமல்ஹாசன் சிறுவனாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானார். ஒரு காலக்கட்டத்தில் படிப்பை தொடர்வதா? சினிமாவா என தடுமாறி சினிமாவில் நீடிப்பது என முடிவெடுத்தார். உதவி இயக்குநர், உதவி நடன ஆசிரியர் என பல்வேறு தொழில்களை சினிமாவில் பார்த்த கமல்ஹாசன் எம்ஜிஆர், சிவாஜிக்கு நடனம் அமைத்துள்ளார். பின்னர் இளைஞராக சில படங்களில் இரண்டாவது நாயகன் ரோலில் நடித்தார்.

கமல்ஹாசனின் ஆரம்ப காலம்
கமல்ஹாசன் பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தாலும் கமல்ஹாசனை கண்டுபிடித்து அவரை மெருகேற்றி திரையுலகில் மின்ன வைத்தவர் கே.பாலச்சந்தர். ரஜினி கமல் இரு நட்சத்திரங்களுக்கும் புதிய வளமான பாதையை அமைத்துக்கொடுத்தார் கே.பாலச்சந்தர். கமல்ஹாசனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க வைத்தார். 1973 தொடங்கி சிறு சிறு வேடங்கள் கொடுத்தார். அதில் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, சொல்லத்தான் நினைக்கிறேன் முக்கியமான படங்கள்.

தொடர் வாய்ப்புத்தந்த கே.பாலச்சந்தர்
முதன் முதலில் கதாநாயகனாக அபூர்வ ராகங்கள், பின்னர் மன்மத லீலை, மூன்று முடிச்சு, அவர்கள், தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிகப்பு, மரோசரித்ரா, இந்தியில் ஏக் துஜே கேலியே மற்றும் 2 இந்திப்படங்கள் கதாநாயகனாக போட்டு எடுத்தார். 1987 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து உன்னால் முடியும் தம்பி படம் முக்கியமானது. பாலச்சந்தர் கமல்ஹாசனை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்ற முக்கியமான இயக்குநர் ஆவார்.

80 களில் களம் கண்டு முன்னேறிய கமல்
80 களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் நடித்தார். அதுவல்லாமல் பல படங்களில் நடித்து முத்திரைப்பதித்தார். சொந்தமாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை எடுத்தார். சத்யராஜுக்கு ஹீரோ வேஷம் கொடுத்து பாட்டில்லாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற படம் எடுத்தார். முதல்படம் ராஜபார்வை வித்தியாசமான முயற்சி ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ராஜ்கமல் மூலம் பல அற்புதமான படங்கள் தந்த கமல்
ஆனாலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இனடர்நேஷன்ல் மூலம் அடுத்த படமாக 1986 ஆம் ஆண்டு தயாரித்த வித்யாசமான படம் தான் விக்ரம். இந்தப்படத்தின் திரைக்கதையை தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக வார இதழில் படம் வெளிவரும் முன் படங்களோடு கதையாக வந்தது. பாடல்களில் புதிய முயற்சி எடுக்கப்பட்டது. கதை அமைப்பும் புதியது. விக்ரம் சிறப்பாக ஓடியது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த கமல்ஹாசனின் முக்கியமான தயாரிப்பு தான் தற்போது 50 நாட்களை கடந்து ஓடும் விக்ரம் திரைப்பட

யாரும் செய்ய முடியாத சாதனையை படைத்த கமல்ஹாசன்
36 ஆண்டுகளுக்கு முன் தான் தயாரித்து, கதாநாயகனாக நடித்து வெற்றிப்பெற்ற விக்ரம் படத்தின் அதே பெயரில் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பெயரில் தானே தயாரித்து முதல்படம் வந்த போது சிறுவர்களாக இருந்தவர்களை தற்போது திரையுலகின் முன்னனி இளைஞர்களை படத்தில் பங்களிப்பை செய்ய வைத்து கதாநாயகனாக நடித்து அவரது திரையுலகில் கானாத மிகப்பெரிய வசூலை வாரிகுவித்த சாதனைக்கு சொந்தமான ஒரே கலைஞர் கமல்ஹாசன் மட்டுமே. ஹாலிவுட்டில் இந்த சாதனையை டாம்குரூஸ் செய்துள்ளார்.

தென் இந்தியாவில் தமிழ் திரையுலக மானம் காத்த விக்ரம்
கமல்ஹாசனின் விக்ரம் பட வெற்றி மூலம் தமிழ் திரையுலக மானம் காத்தது எனலாம். கடந்த ஆண்டு தென் இந்தியாவில் தெலுங்கில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் கேஜிஎஃப்-2 வெளியானது மூன்று படங்களும் இந்திய அளவில் பேசப்பட்டது. ஆனால் தமிழில் பீஸ்ட் விமர்சிக்கப்பட்டது. தமிழில் தரமான படம் எடுக்க ஆள் இல்லை என்பதை விக்ரம் வந்து முறியடித்தது. எப்போதும் நாங்கள் தான் டாப் என மீண்டும் நிரூபிக்க விக்ரம் உதவியது எனலாம்.
Recommended Video

விக்ரம் படம் கமலுக்கு தந்த புதிய நம்பிக்கை
தன் சாதனைகளை தானே முறியடிக்கும் கலைஞன் கமல்ஹாசன் பல புதுப்புது முயற்சிகளை சினிமாவில் எடுத்தவர். வித்தியாசமான முகமாற்றங்கள் மூலம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு தமிழ் படங்களை கொண்டுச் சென்றவர். தென் மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தைரியமாக எடுத்தவர். பல புதிய முயற்சிகளுக்கு சொந்தக்காரரான கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தின் வெற்றி மேலும் உத்வேகம் தரும் இதன் மூலம் இன்னும் பல புதிய முயற்சிகளை தமிழ் திரையுலகம் காணும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications











