பிக் பாஸூக்கு வந்ததே இதுக்குத்தான்.. உளறிய மாயா கிருஷ்ணன்.. எல்லாரும் விவரமாத்தான் இருக்காங்க!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மாயா கிருஷ்ணன் நுழைந்துள்ளார்.
வானவில் வாழ்க்கை, 2.O, மகளீர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ...ஹூம்...கத்தி அனைவரும் கவனிக்கும் நடிகையாக மாறினார்.
நடிகை மாயா கிருஷ்ணன்: பிக் பாஸ் வீட்டில் 12வது போட்டியாளராக நுழைந்த மாயா கிருஷ்ணன், என்னுடைய சொந்த ஊர் மதுரைதான். சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னையில் செட்டில் ஆனேன். படவாய்ப்பு கிடைக்காததால், தெரு தெருவாக அழைத்து இருக்கிறேன். ஆனால் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.

பேசுவதற்காக வந்தேன்: மேலும், விக்ரம் படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் நீங்கள் பரிசு கொடுத்தீர்கள், என் நண்பர்கள் கமல் என்ன பரிசு கொடுத்தார்கள் என்று கேட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். விலை மதிப்பில்லாத நேரத்தை கமல் சார் எனக்கு கொடுத்து இருக்கிறார். விக்ரம் படத்தில் நான் உங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நிறைய வாய்ப்பு: இந்த மூனு மாசம் உங்களுடன் பேசுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன் என்றார். இதையடுத்து மாயா கிருஷ்ணனுக்கு க்ளவுன் மூக்கை பரிசாக கொடுத்து உள்ளே இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்றார். மேலும், வாய்ப்பு கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருந்த எனக்கு, விக்ரம் படத்திற்கு பின் நிறைய வாய்ப்பு வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











