பிக் பாஸ் சீசன் 7 கன்பார்ம் போட்டியாளர்.. விக்ரம் பட நடிகை மாயா கிருஷ்ணன் யார் இவர்?
சென்னை: விக்ரம் படம் மூலம் பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.
மாடல் அழகியான மாயா கிருஷ்ணன் 1992ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர். பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

இவரது சகோதரி சுவாதி எஸ். கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பாடகியாக இருக்கிறார்.
நடிகை மாயா கிருஷ்ணன்: சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வமாக இருந்த இவர், கல்லூரியில் படிக்கும் போதே, டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட் மற்றும் எ வேஸ்டட் எபோர்ட் என்ற நாடகங்களில் நடித்தார். அதன் பிறகு, ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்த தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார்.
நடித்த படங்கள்: வானவில் வாழ்க்கை, சூப்பர் ஸ்டார் நடித்த 2.O, மகளிர் மட்டும், தொடரி, வேலைக்காரன், ஏன்டா தலையில எண்ணை வெக்கல,விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தாலும், கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ...ஹூம்...என கத்தி அனைவரும் கவனிக்கும் நடிகையாக மாறினார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும், லியோ படத்திலும் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விவகாரமான பதில்: இந்நிலையில், இன்று தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் மாயா கிருஷ்ணன் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. விக்ரம் படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்த படத்திற்கு பின அளித்த பேட்டியில், கால் கேர்ள் கேரக்டரில் நடித்தது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு விவகாரமாக பதிலளித்தது. இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது.இன்று தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் நிச்சயம் கண்டென்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications