“பத்தல பத்தல“னு பாடி.. வசூலில் சாதனை படைத்த விக்ரம்.. புஷ்பா வசூலை முறியடித்தது !

சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படமான புஷ்பா படத்தின் வசூல் சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது.

Recommended Video

Surya | Madhavan-னை பார்த்து திகைத்து போன Suriya | Rocketary *TamilNadu | Oneindia Tamil

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன்,விஜே மகேஷ்வரி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் விக்ரம்

ஜுன் 3ம் தேதி வெளியான இப்படம் மூன்று வாரங்களை நிறைவு செய்து நான்காவது வாரத்திலும் வெற்றிகரமாக திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விக்ரம் பாக்ஸ் ஆபீஸ் சாதனை

விக்ரம் பாக்ஸ் ஆபீஸ் சாதனை

தமிழ் சினிமாவின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்து நம்பர் 1 வசூல் படமாக இப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. நான்காவது வாரத்திலும் நூற்றுக்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று வார முடிவில் இந்தப் படம் 380 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியில் சரியாக ஓடவில்லை

இந்தியில் சரியாக ஓடவில்லை

தமிழகத்தில 165 கோடி, கேரளாவில் 36 கோடி, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 28 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, வட இந்தியாவில் 11 கோடி, வெளிநாடுகளில் 120 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியில் இப்படம் சரியாக ஓடிவில்லை. இந்தியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் 500 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், ஜுலை முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் விக்ரம் வெளியாக உள்ளது. அங்கும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மகிழ்ச்சியில் கமல்

மகிழ்ச்சியில் கமல்

விக்ரம் படத்தின் வசூல் மூலம் தமிழகத்தில் விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக வசூல் செய்த நாயகன் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் கமல்ஹாசன். இது அவருடைய நீண்ட நாள் கனவு என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மற்றபடி வேறு எந்த நடிகரின் படமும் இந்த வருடம் இவ்வளவு வசூல் செய்யவில்லை. இதனால் கமல்ஹாசன் உச்சகட்ட மகிழ்ச்சியில் சிரித்த முகத்துடன் இருக்கிறார்.

தொடர்ந்து முன்னேறும் விக்ரம்

தொடர்ந்து முன்னேறும் விக்ரம்

இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான பான் இந்தியா திரைப்படமான புஷ்பா படத்தின் வசூல் சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது. 'புஷ்பா' திரைப்படம் உலகம் முழுவதும் 365 கோடி ரூபாயை வசூலித்திருந்தது. விக்ரம் ரூ.400 கோடி வசூலித்து அந்த படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. பிரபாஸ் நடித்த 'சாஹோ' 433 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. விரைவில் அந்த படத்தின் வசூலையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X