தமிழ்நாட்டுல மட்டும் இரண்டே நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா? தொடர்ந்து வசூல்வேட்டையில் விக்ரம்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம்.
இந்தப் படம் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படம் மேக்கிங்கில் மட்டுமில்லாமல் தற்போது வசூலிலும் மிரட்டி வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது விக்ரம் படம். கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளதால் இந்தப் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது.

சிறப்பான திரைக்கதை
படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கைதி 2 மற்றும் விக்ரம் 3க்கான லீட்கள் படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் இறுதியில் வந்தாலும் ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை தந்துள்ளது.

சிறப்பான கேரக்டர்கள்
படத்தை பார்ப்பதற்கு சிறப்பான பல காரணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் லோகேஷ். குறிப்பாக பகத் பாசில், விஜய் சேதுபதியும் கமலுடன் இணைந்து மிரட்டியுள்ளனர். பகத் பாசில் படத்தில் அதிகமான காட்சிகளில் வருகிறார். அவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

2 நாளில் சிறப்பான வசூல்
இந்நிலையில் கடந்த இரு தினங்களில் இந்தப் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டுமே படம் சிறப்பான காட்சிகளுடன் திரையிடப்பட்டு வரும் சூழலில் படம் கடந்த இரு தினங்களில் 43 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களின் வசூலை விக்ரம் பீட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

த்ரில் அனுபவம்
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே வெளியான படங்களில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை, பீஸ்ட், அண்ணாத்த படங்கள் வசூல்ரீதியாக சிறப்பாக அமைந்த போதிலும் ரசிகர்களை கவர தவறியுள்ளது. அந்த வகையில் விக்ரம் படம் அவர்களுக்கு சிறப்பான த்ரில் அனுபவத்தை கொடுத்துள்ளது.

தொடர்ந்து வசூல்வேட்டை
படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கலெக்ஷன்ஸ் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படங்களின் புக்கிங்கும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், 3வது நாளான இன்றும் விக்ரம் படம் வசூல்வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

கமலின் சிறப்பான ரீ-என்ட்ரி
அமெரிக்காவில் விக்ரம் படம் கடந்த இரு நாட்களில் மட்டுமே 1.3 மில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது. இதன்மூலம் பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த அமெரிக்க வசூலையும் இரண்டே நாட்களில் விக்ரம் படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 4 வருடங்களுக்கு பின்பு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள கமல்ஹாசனுக்கு இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











