தொடர்ந்து ஏறுமுகத்தில் விக்ரம் படத்தின் வசூல்.. எல்லா சாதனைகளையும் முறியடிக்க முன்னேறும் விக்ரம்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம்.
இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான நிலையில் வாரயிறுதி நாட்களில் மட்டுமின்றி நேற்று வார துவக்கத்திலும் சிறப்பான வசூலை எட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் கலெக்ஷன்ஸ் 175 கோடி ரூபாயை உலகளவில் தாண்டியுள்ளது.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம். இந்தப் படம் மிரட்டலான மேக்கிங் மற்றும் திரைக்கதை உள்ளிட்டவற்றால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் தொடர்ந்து வரவேற்று வருகின்றனர்.

4 நாட்கள்.. சிறப்பான வசூல்
இந்நிலையில் படம் வெளியாகி கடந்த 4 நாட்களில் மிகச்சிறப்பான வரவேற்பை திரையரங்குகளில் பெற்று வருகிறது. தொடர்ந்து கடந்த இரு மாதங்களில் படத்திற்கு கமல் உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பான பிரமோஷனை கொடுத்ததும் படத்திற்கான வரவேற்பு அதிகரித்ததற்கு சிறப்பான காரணமாக அமைந்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தப் படத்திற்கு சிறப்பாக பிரமோஷன் கொடுக்கப்பட்டது. படத்திற்காக டெல்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் கமல் ஓடி ஓடி பிரமோஷன் கொடுத்திருந்தார். அவரது தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது. மேலும் 4 ஆண்டுகள் கழித்து கமலின் இந்தப் படம் வெளியானதும் படத்தின் வரவேற்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மிரட்டலான சூர்யா கேரக்டர்
சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களின் கேரக்டர்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். குறிப்பாக சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர், ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டுள்ளது. அவரது மிரட்டலான கேரக்டர் அடுத்தப் படத்திற்கான லீட் என பல விஷயங்கள் படத்தை கொண்டாட காரணமாக அமைந்தது.

4 நாட்களில் ரூ.175 கோடி வசூல்
இதனிடையே கடந்த 4 நாட்களில் படம் உலகளவில் 175 கோடி ரூபாய் கலெக்ஷனை செய்துள்ளது. தற்போது தமிழகத்தில் 77 கோடி ரூபாய் வசூலை 4 நாட்களில் படம் செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் 100 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் சாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

தமிழகத்தில் ரூ.77 கோடி
நேற்றைய தினம் மட்டும் படம் தமிழகத்தில் 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அவர் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், சூர்யா என படங்களை தயாரிக்க இந்தப் படம் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











