Don't Miss!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- News
கனமழை வெளுத்து வாங்க போகுது! பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனமாக இருங்க மக்களே..!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமல்ஹாசன் பிறந்தநாளில் விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிடும் படக்குழு!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யானை படத்தின் சூட்டிங் ஸ்பாட்... உற்சாக புகைப்படம் வெளியிட்ட அருண் விஜய்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மூன்று திரைப்படங்களும் வெற்றி
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இளம் இயக்குனராக அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்று இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளதோடு இந்திய அளவிலும் பிரபலமான இயக்குனராக மாறியுள்ளார்.

இந்தியிலும் ரீமேக்
மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை இயக்கி தென்னிந்திய அளவில் பிரபலம் அடைந்தார். கைதி இப்பொழுது இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் மாஸ்டர் வெளியாகி இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறியுள்ளார்.

விக்ரம்
ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இவர் இப்பொழுது தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் ஆக்சன் கதை களத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் கூடுதலாக மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகச் சிறந்த நடிகர்கள் ஒன்றாக இணைந்துள்ள இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீசரை வெளியிட
முதற் கட்ட படபிடிப்பு முடிவு பெற்றதாக படக்குழு சென்ற மாதம் அறிவித்திருந்தது. அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது மேலும் அவருக்கு ஜோடியாக ஸ்வஸ்திகா கிருஷ்ணன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது அனிருத் இசை அமைக்கிறார். இந்த நிலையில் வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.