200 கோடி வசூலை தட்டித் தூக்கிய விக்ரம்.. மின்னல் வேகத்தில் எகிறும் வசூல்.. ஆச்சர்யத்தில் திரையுலகம்!

சென்னை: உலகளவில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 200 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபேன் பாய் சம்பவம்னா எப்படி இருக்கணும்னு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்ற கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் மற்றும் அவரது உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார்.

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

இதுவரை இல்லாத அளவுக்கு கமல்ஹாசனின் திரைப்படம் இப்படியொரு மின்னல் வேகத்தில் வசூல் ஈட்டுகிறது என்பதை பார்த்து இந்திய திரையுலகமே ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளது. தமிழ் சினிமாவுக்கு நிகராக இந்திய அளவிலும் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறக்கிறார் கமல். இதே வேகத்தில் சென்றால், இரண்டாவது வார இறுதியிலேயே மிகப்பெரிய ரெக்கார்டை விக்ரம் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வெளிநாடுகளில் புரமோஷன்

வெளிநாடுகளில் புரமோஷன்

ராஜமெளலி ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பண்ணியதை போலவே இந்தியாவில் மட்டுமின்றி துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கமல்ஹாசனே நேரடியாக சென்று மிகப்பெரிய புரமோஷன் செய்தார். விக்ரம் படத்தை பார்த்து அதன் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் கமல் இப்படியொரு புரமோஷன் செய்கிறார் என்பதை முன்னரே அறிவித்திருந்தோம். அது தற்போது நடந்து வருகிறது.

200 கோடி வசூல்

200 கோடி வசூல்

4 நாட்களில் விக்ரம் திரைப்படத்தின் வசூல் 175 கோடி ரூபாயாக உள்ளது என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது விக்ரம் திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வார நாட்களிலும் உலகளவில் தினமும் 25 கோடிக்கு விக்ரம் படம் வசூல் பெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளார்.

கோலிவுட்டின் பான் இந்தியா

கோலிவுட்டின் பான் இந்தியா

ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் திரைப்படங்கள் பான் இந்திய திரைப்படமாக இந்த ஆண்டு 1000 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் இருந்தும் பான் இந்தியா படத்தை கொடுத்து வசூல் வேட்டையை உலகளவில் நடத்த முடியும் என்பதை கமல்ஹாசன் செய்து காட்டி உள்ளார்.

Recommended Video

Kamal Gifts A Luxury Car To Lokesh Kanagaraj | இன்ப அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜை *AutoNews
கார் கிஃப்ட்

கார் கிஃப்ட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் பிராண்ட் சொகுசு காரை விக்ரம் படத்தின் வெற்றிப் பரிசாக கமல்ஹாசன் கொடுத்துள்ளார். தற்போது அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "நன்றி ஆண்டவரே" என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

உதவி இயக்குநர்களுக்கு பைக்

உதவி இயக்குநர்களுக்கு பைக்

படம் வெற்றிப் பெற்று மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினால், இயக்குநர்களை மட்டுமே தயாரிப்பாளர் கவனிப்பார். ஆனால், லோகேஷ் கனகராஜின் 13 உதவி இயக்குநர்களுக்கு இரு சக்கர வாகனத்தை கமல்ஹாசன் பரிசாக வழங்கியதை ஒட்டுமொத்த சினிமா துறையினரும் பாராட்டி வருகின்றனர்.

பீஸ்ட், வலிமை காலி

பீஸ்ட், வலிமை காலி

முதல் வார இறுதியிலேயே இப்படியொரு வசூல் வேட்டையை விக்ரம் நடத்தி வரும் நிலையில், இரண்டாம் வார இறுதியில் விக்ரம் படத்தின் வசூல் எங்கே போகும் என்கிற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஆண்டு வெளியான பீஸ்ட், வலிமை உள்ளிட்ட படங்களின் வசூலை அசால்ட்டாக துவம்சம் செய்து விட்டு இந்த ஆண்டு அதிக வசூல் செய்த கோலிவுட் படம் என முதலிடத்தை விக்ரம் பிடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X