பாகுபலி 2 படத்தோட கலெக்ஷனை பீட் செய்த விக்ரம்.. தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் விக்ரம்.

இந்தப் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில், தொடர்ந்து 16 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

இந்தப் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 350 கோடிகளை தாண்டியுள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி, மைனா நந்தினி, காயத்ரி, மகேஷ்வரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் விக்ரம். இந்தப் படம் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

சிறப்பான வசூல்வேட்டை

சிறப்பான வசூல்வேட்டை

அமெரிக்கா உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பான வசூலை பெற்றுள்ள நிலையில், அங்கு அதிகமாக வசூலித்துள்ள முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் விக்ரம் படம் பெற்றுள்ளது. தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர் என மாஸ் காட்டி வருகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் வசூல்வேட்டை நடத்தி வருகிறது. இதனால் கமல் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

விக்ரம் வெற்றி விழா

விக்ரம் வெற்றி விழா

சமீபத்தில் படக்குழு மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து வெற்றி விழா கொண்டாடினார். சென்னை ரேஸ் கோர்சில் இந்த விழா தடபுடலான விருந்துடன் நடத்தப்பட்டுள்ளது. 40 வகையான வெஜ், நான் வெஜ் உணவுகளுடன் இந்த சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. மேலும் விக்ரம் சக்சஸ் மீட் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே உள்ளது.

கமல்ஹாசன் பேச்சு

கமல்ஹாசன் பேச்சு

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படம் தன்னுடைய படம் போன்றது என்றும் அதற்காக அதன் வெற்றிக்காக தான் எதையும் செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார். லோகேஷ் இந்தப் படத்தை முடித்துவிட்டு விரைவில் விக்ரம் 3 படத்தை இயக்க வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் அவர் தளபதி 67 படத்தின் உரிமையை கைப்பற்றுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

16 நாட்களை கடந்து சாதனை

16 நாட்களை கடந்து சாதனை

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 16 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழகத்தில் பீஸ்ட், பாகுபலி 2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை இந்தப் படம் தற்போது முறியடித்து தமிழகத்தில் அதிகம் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்னதாக பாகுபலி 2 படம் தமிழகத்தில் மட்டுமே 152 கோடி ரூபாய்களை வசூலித்திருந்தது.

சர்வதேச வசூல் ரூ.355 கோடி

சர்வதேச வசூல் ரூ.355 கோடி

இது ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த நிலையில் தற்போது இந்த வசூல் சாதனையை 16 நாட்களில் கமலின் விக்ரம் படம் கடந்துள்ளது. இதனிடையே சர்வதேச அளவில் 355 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது விக்ரம். வெளிநாடுகளில் மட்டுமே 120 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாம். தொடர்ந்து இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது விக்ரம் படம்.

மேலும் வசூல் உயரும்

மேலும் வசூல் உயரும்

தொடர்ந்து இன்றைய தினமும் வாரயிறுதி நாள் என்பதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் இத்தகைய வசூலையும் பாராட்டுக்களையும் குவித்துள்ளதால் தனக்கு மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளதாகவும் அடுத்தப்படத்தை மேலும் கவனத்துடன் இயக்குவேன் என்றும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X