விக்ரம் படத்தின் டைரக்டர் கமல் தான் லோகேஷ் கனகராஜ் சும்மா பேருக்கு ஆணித்தனமாக கூறும் பிரபல விமர்சகர்

சென்னை : மாநகரம், கைதி, மாஸ்டர் என தனது ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் விக்ரம்

தன்னுடைய கலையுலக குருவான கமல்ஹாசனை இயக்குவதால் விக்ரம் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி விக்ரம் படத்தின் இயக்குனர் கமல் தான் என ஆணித்தரமாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்திய அளவில் மார்க்கெட்

இந்திய அளவில் மார்க்கெட்

மாநகரம், கைதி,மாஸ்டர் என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். விஜய், விஜய்சேதுபதி கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு இப்பொழுது இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,இந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வசூல் வேட்டை நடத்தியது. வெளிநாடுகளிலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ததால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவிலேயே உள்ளது.

முழுக்க முழுக்க ஆக்ஷன்

முழுக்க முழுக்க ஆக்ஷன்

இந்த நிலையில் தனது கலையுலக குருவான கமல்ஹாசனை அடுத்ததாக வைத்து இயக்க உள்ளார். அந்த படத்திற்கு விக்ரம் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் என்ற டைட்டில் கமல்ஹாசன் நடிப்பில் 1986ல் ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அந்த டைட்டிலை மீண்டும் பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

விக்ரம்

விக்ரம்

தனது ஒவ்வொரு படங்களிலும் தனித்துவமான மேக்கிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இந்த படத்தையும் கமல்ஹாசன் படம் போல் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் படம் போல தனித்துவமாக இயக்குவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் வலைப்பேச்சு சினிமா விமர்சகர் பிஸ்மி விக்ரம் படத்தின் இயக்குனர் டைரக்டர் கமல் தான் என ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

Recommended Video

M.S Bhasker Exclusive | நடிகன் ஆகலன்னா Police ஆயிருப்பேன் | Filmibeat Tamil
விக்ரம் படத்தின் டைரக்டர் கமல் தான்

விக்ரம் படத்தின் டைரக்டர் கமல் தான்

மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது கமல்ஹாசனை பொறுத்தவரையிலும் யார் டைரக்டராக இருந்தாலும் அவரது தலையீடு இருக்கும், தான் நடிக்கும் படத்திற்கு உண்மையான டைரக்டர் கமல்ஹாசன்தான். டைட்டில் கார்டில் இயக்குனர் என்ற பெயரை போடுபவர் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார். இப்படித்தான் கமல்ஹாசனின் முந்தைய படங்கள் இருந்துள்ளது எனவே லோகேஷ் கனகராஜ் இதற்கு விதி விலக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். எனவே கட்டாயமாக விக்ரம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே தெரிந்துவிடும் இது லோகேஷ் கனகராஜ் படமா இல்லை கமல்ஹாசன் படமா என்று. இவ்வாறு வலைப்பேச்சு பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் கொடுத்த பேட்டியில் சர்ச்சையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X