“விக்ரம்“ முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் மாஸ் வேட்டை.. ப்ளாக் பஸ்டர் சாதனை!

சென்னை : நேற்று வெளியான விக்ரம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்துள்ளது.

கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள விக்ரம் படம் நேற்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசானது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன், சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

விக்ரம்

விக்ரம்

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், சார்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு ஸ்ட்ண்ட் மாஸ்டர்களாக அன்பறிவு பணியாற்றி உள்ளனர். உலகமெங்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசானது.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி 5 மொழிகளில் பான் இந்தி திரைப்படமாக வெளியாகி உள்ள விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழகத்தில் 34 கோடியை எட்டி உள்ளதாகவும். உலகம் முழுவதும் ரூ.40 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் ரூ100 கோடி

விரைவில் ரூ100 கோடி

நேற்று காலை மற்றும் பிற்பகல் காட்சியும் மாலை மற்றும் இரவு காட்சியில் 90% க்கும் அதிகமான திரையரங்கில் விக்ரம் ஹவுஸ்ஃபுலாக ஓடியுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், விக்ரம் படம் விரைவில் தமிழகத்தில்100 கோடியை தொடும் என வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கணித்துள்ளார்.

Recommended Video

Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
அதிகம் வசூலித்த படம்

அதிகம் வசூலித்த படம்

அதே போல , 2022 ஆம் ஆண்டு தமிழக பாக்ஸ் ஆபிஸில் சிறந்த ஓப்பனிங் படங்களின் பட்டியலில் இப்படம் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விக்ரம் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸிலும் பிரமாதமாக வசூல் செய்து வருகிறது. கமலின் கெரியரில் முதல் நாளில் அதிக தொகை வசூலித்த படமாக விக்ரம் படம் மாறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X