கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு... உலகநாயகன் படம்னா சும்மாவா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம்.

இந்தப் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை புக் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பல இடங்களில் இந்தப் படத்தின் விநியோக உரிமைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மரண மாஸாக காத்திருக்கின்றனர். படத்தின் புக்கிங்கிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

100 % என்னுடைய படம்

100 % என்னுடைய படம்

இதேபோல அனைத்து மாநிலங்களிலும் இந்தப் படம் சிறப்பான விநியோகஸ்தர்களிடம் கைமாறியுள்ளது. வெளிநாடுகளிலும் படம் சிறப்பான வகையில் ரிலீசாக உள்ளது. ஏறக்குறைய படத்தின் சக்சஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இது 100 சதவிகிதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சமரசம் செய்யாத லோகேஷ்

சமரசம் செய்யாத லோகேஷ்

படத்தில் கமலுக்காக கதையில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளவில்லை என்றும் கமலும் தனக்கு முழுமையான சுதந்திரத்தை நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். லோகேஷின் கைதி, மாநகரம் போன்ற படங்கள் போன்று இந்தப் படமும் கதையை மட்டுமே நம்பி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடிப்பொலி என பாராட்டு

அடிப்பொலி என பாராட்டு

இதனிடையே இந்தப் படத்தின் இறுதி வடிவத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்த்த கமல்ஹாசன் படம் அடிப்பொலி என்று அவரது நண்பர் மகேஷிடம் தெரிவித்ததை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் லோகேஷின் வளர்ச்சியை கண்டு கமல் மகிழ்ச்சியுற்றதாகவும் அவருடன் அடுத்த ப்ராஜக்டிலும் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

கேன்சில் திரையிடப்பட்ட ட்ரெயிலர்

கேன்சில் திரையிடப்பட்ட ட்ரெயிலர்

இந்நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகநாயகன் கமல் கலந்துக் கொண்டு சிறப்பித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உடைகளில் அவர் கேன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அதிரடி கிளப்பி வருகிறார். இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரெயிலர் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

இந்த ட்ரெயிலர் அனைத்து தரப்பினரையும் மிகவும் கவர்ந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும், பிரபலங்களும் பிரம்மாண்டமான இந்த ட்ரெயிலரை கண்டு ரசித்துள்ளனர். படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகவுள்ள நிலையில், இந்த பிரம்மாண்டமான விழாவில் விக்ரம் ட்ரெயிலர் திரையிடப்பட்டது சிறப்பான ப்ரமோஷனாக கருதப்படுகிறது.

சிறப்பு காட்சி

சிறப்பு காட்சி

அமெரிக்காவில் வரும் 3ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் படத்தின் சிறப்பு காட்சி வரும் ஜூன் 2ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதையடுத்து இந்தப் படத்திற்கு இது சிறப்பான பிரமோஷனாக இருக்கும் என்று நம்பலாம். தொடர்ந்து அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X