விக்ரம் பட நாயகி... சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த அனிதா... குழந்தையுடன் புகைப்படங்கள் பகிர்வு
மும்பை : சாமுராய் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக வந்து தன்னுடைய சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் அனிதா.
கடந்த 2013ல் ரோகித் ரெட்டி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

சாமுராய் படத்தின் நடிகை
19 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விக்ரம் படமான சாமுராய் மூலம் கோலிவுட்டில் கவனம் பெற்றவர் அனிதா. இந்த படத்தில் பள்ளி மாணவியாக வந்து தன்னுடைய சிரிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அனிதா. மேலும் வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டில் குழந்தை
மேலும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டில் ரோகித் ரெட்டி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் அனிதா. அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

ரசிகர்கள் வாழ்த்து
தனது குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ள அனிதா தற்போது தன்னுடைய குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் அழகாக இருக்கும் ஆரவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வைரலான புகைப்படங்கள்
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் அனிதா. இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளன. லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











